Saturday, December 16, 2006

17. 50 ஓவரும் விளையாடுவம்ல!

கங்குலி : நாங்க 50 ஓவரும் முழுசா விளையாடுறதில்லேன்னு சொன்னது யாரு? இப்ப பாருங்க 50 ஓவருலயும் 5 பேருதான் அவுட்டாகி இருக்கோம்.

ரசிகர் : அது ஒன் டே மேட்சுல! தலைவா! இப்போ நீங்க விளையாடுறது டெஸ்ட் மேட்சு!

Thursday, December 14, 2006

16. இன்னும் இருக்கிறது ஆ(காயம்)ப்பு!

நாளை

டிசம்பர் 15 2006

இந்தியா

தென்னாப்பிரிக்கா

அணிகளுக்கிடையேடான

டெஸ்ட் கிரிக்கெட்

போட்டித் தொடர்

ஆரம்பம்

Wednesday, December 06, 2006

15. கிரிக்கெட்! கிரிக்கெட்!

எச்சரிக்கை 1: இது தனிமனித தாக்குதல் அல்ல! (ஒட்டு மொத்த டீமே நையாண்டி செய்யப் படுகிறது)

எச்சரிக்கை 2: லொடுக்குப் பாண்டி அவர்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்!


ஜோக் 1 :

நாங்க சீக்கிரம் அவுட்டாகிறடோம்தான். அதுக்காக 5 ஒன் டே மேட்சையும் ஒரே நாளில் வெச்சிக்கலாமான்னு கேக்குறது கொஞ்சம் கூட நல்லா இல்லை!

ஜோக் 2 :

என்னங்க இது பேட் பண்ணுற டீமில் பத்து பேரும் காலில் பேடைக் கட்டிக்கிட்டு கிரவுண்டுக்குள்ள இருக்குறாங்க!

அட! ஒருத்தர் அவுட்டாகி இன்னொருத்தர் வருவதற்கு லேட் ஆகுதாம்.

ஜோக் 3 :

இதுக்குதான் சீக்கிரம் கெளம்புன்னு சொன்னேன்! பார்! வந்து சேருவதற்குள் இண்டியன் இன்னிங்க்ஸ் முடிஞ்சிடுச்சி!

ஜோக் 4 :

இன்னிக்கு கிரிக்கேட் மேட்ச் வேற இருக்கு! சினிமாவுக்கு போக முடியாதுன்னு நினைக்கிறேன்.

இந்தியா விளையாடுற மேட்ச்தானே! மேட்ச் பாத்துட்டு படம் ஆரம்பிக்குறதுக்குள்ள போயிடலாம்!

Thursday, November 30, 2006

14. சிங்கம் கெளம்பீருச்சுடோய்!

தென்னாப்ரிக்கா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சவுரவ் கங்குலி இடம் பெற்றுள்ளார். டில்லியில் நடைபெற்ற இந்திய அணி தேர்வு குழு கூட்டத்தில் டெஸ்ட் போட்டிக்கான அணி அறிவிக்கப்பட்டது. நீண்ட எதிர்பார்ப்பிற்கு பின் கங்குலி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 10 மாதங்களுக்கு முன் பாகிஸ்தான் தொடரில் கங்குலி விளையாடினார். அதன் பின்னர் தற்போது அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். லட்சுமண் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். அணி விபரம் :- ராகுல் டிராவிட் (கேப்டன்), லட்சுமண் (துணை கேப்டன்), சச்சின், சவுரவ் கங்குலி, சேவாக், காம்பிர், வாசிம் ஜாபர், தோனி, கார்த்திக், முனாப் படேல், ஜாகிர் கான், ஸ்ரீ சாந்த், வி.ஆர்.வி. சிங், பதான், கும்ளே.

செய்தி நன்றி : இட்லி வடை

Wednesday, November 29, 2006

13. இன்னிக்கும் அல்வாதான்.

தென் ஆப்பிரிக்கா Vs இந்தியா (4 th ODI) 29 Nov 2006

தென் ஆப்பிரிக்கா - 243 / 8

இந்தியா 163 / 10(38.1 ஓவர்கள்)

வாசிம் ஜாஃபர் - 10
வீரேந்திர சேவாக் - 18
*சச்சின் டெண்டுல்கர் - 01
முகமது காயிஃப் - 10
மகேந்திரசிங்க் தோணி - 26
MD கார்த்திக் - 17
அஜித் அகர்கர் - 06
ஜாகீர் கான் - 11
அணில் கும்ப்ளே - 2
ஸ்ரீசாந்த் - 3

இர்ஃபான் பதான் - 47 (நாட் அவுட்)

12 . லொடுக்குப் பாண்டியின் நப்பாசை!

இன்றேனும்
வெல்லுமோ
இந்திய அணி!

அன்றி
இன்றும்
போகுமோ
மானம்தான்
ராக்கெட்டில்!

என்றுமே
பாராத
பாராளுமன்றம்
கூட
கவலை கொண்ட
விஷயமிது!

ஆடும்
அணியில்
போதாதோ
பதினொருவர்!

அணியினரோ
ஆமாம்
என்கின்றனர்!
மீதம் உள்ள
40 ஓவர்களுக்கும்
வேண்டுமாம்
வீரர்கள்!

ஆடுகளம் சரியில்லை!
தட்பவெப்பம் சரியில்லை!
அனுபவங்களும் போதவில்லை!
போதாதென்று இன்று
அரசியலும்
சரியில்லை!
பாவம்!
என்னதான் செய்வார்கள்
வீரர்களும்!

இன்றென்ன காரணமோ?
எப்போதேனும் இவையெல்லாம்
சரியாய் அமைந்து
எதிரணியின் வீரர்களும்
சோர்ந்திருந்தால்
அன்றுதான்
வருவாரோ வருண
பகவானும்தான்!

எடுக்கும் ஓட்டங்களின்
எண்ணிகை அதிகம்
வேண்டுமென்பதை
நாம் ஃபீல்டிங்க்
செய்யும்போது
என்று ஏன்
தவறாய்ப்
புரிந்து கொள்கின்றனர்?

இப்படியே போனால்..!
ஜிம்பாப்வே,
வங்கதேசம்,
கென்யா,
அரேபிய அணிகள்
எல்லாம் இந்தியாவில்
சுற்றுப் பயணம்
மேற்கொண்டு
ஒரு நாள் போட்டிகளில்
விளையாட
விருப்பம் தெரிவிக்கக் கூடும்!
போட்டி போட்டுக் கொண்டு!

என்றுதான்
நிறைவேறுமோ
லொடுக்குப் பாண்டியின்
நப்பாசை!

Sunday, November 26, 2006

11. பயமுறுத்துவது எப்படி?

Thursday, November 23, 2006

10. பின்னூட்ட மட்டுறுத்தல் - பிரசுரி/நிராகரி

மறுமட்டுறுத்தல் செய்வது எப்படி என்ற முந்தைய பதிவில் மறுமொழி மட்டுறுத்தலை ஏற்பாடு செய்வது எப்படி என்று பார்த்தோம். இப்போது வந்திருக்கும் பின்னூட்டங்களை பிரசுரிப்பது மற்றும் நிராகரிப்பது என்று பார்ப்போம்.

1. உங்கள் பிளாக்கர் அக்கவுண்டில் லாகின் செய்யுங்கள்.

2.நீங்கள் வைத்திருக்கும் பிளாக்குகளின் பட்டியல் டேஷ் போர்டில் வரிசையாக இருக்கும்.அந்த பட்டியலில் பிளாக்(Blog Name) பெயர், நியூ போஸ்ட், சேஞ்ச் செட்டிங்க்ஸ்னு மூணு பகுதி இருக்கும். குறிப்பிட்ட பிளாக் பெயர் இருக்கும் முதல் பகுதியை கிளிக் செய்யுங்கள்.


Photobucket - Video and Image Hosting

3. அங்கே போஸ்டிங் என்ற டேபில்(Tab) கிரியேட், எடிட் போஸ்ட்ஸ், மாடரேட் கமெண்ட்ஸ், ஸ்டேடஸ் என்ற ஆப்ஷன்கள் இருக்கும். அதில் மாடரேட் கமெண்ட்ஸ் என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்யுங்கள்.

Photobucket - Video and Image Hosting

4. அங்கே உங்களுக்கு வந்திருக்கும் இதுவரை பரிசீலிக்கப்படாத பின்னூட்டங்கள் பின்னூட்டங்களை இட்டவர்களின் பெயருடன் பட்டியலிடப்பட்டிருக்கும். பதிவுகள் வாரியாகப் பார்க்கவேண்டுமானால் மேலே உள்ள சார்ட் : போஸ்ட் நேம் என்ற வார்த்தையைக் கிளிக் செய்யுங்கள். அப்போது பதிவுகள் வாரியாக வந்த பின்னூட்டங்கள் காட்டப்படும். பின்னர் ஒவ்வொரு பின்னூட்டத்தின் இடதுபுறம் கறுப்பு நிறத்தில் உள்ள அம்புக்குறியை கிளிக் செய்தால் அப்பின்னூட்டத்தை முழுமையாகக் காணமுடியும்.

Photobucket - Video and Image Hosting

5. இப்போது நீங்கள் பிரசுரிக்க விரும்பும் பின்னூட்டங்களை ஒவ்வொரு பின்னூட்டத்தின் இடது புறத்திலும் கறுப்பு அம்புக்குறிக்கு முன்பாக இருக்கும் சதுரத்திள் மௌஸை வைத்து கிளிக் செய்து தேர்வு செய்து பிரகு கீழே இருக்கும் பப்ளிஷ் என்ற பொத்தானை அழுத்துங்கள்.

இதே போல் நிராகரிக்க வேண்டிய பின்னூட்டங்களையும் தனியே தேர்வு செய்து ரிஜெக்ட் என்ற பொத்தானை அழுத்துங்கள்.

அவ்வளவுதான்.

Photobucket - Video and Image Hosting

டிஸ்கி : பின்னூட்டங்களை அனுமதிக்க அதாவது பிரசுரிக்கவும், நிராகரிக்கவும் கற்றுக் கொண்டீர்கள். இதனை அவரவர் பிளாக்குகளில் மட்டும் செய்யவும். அடுத்தவர் பிளாக்குகளில் சென்று செய்ய முயற்சி செய்யவேண்டாம். அப்படிச் செய்யும் விஷமிகளின் குறும்புத்தனத்திற்கு நான்தான் கற்றுக்கொடுத்தேன் என்ற முறையில் ஆவி அண்ணாச்சியாகிய நான் பொறுப்பேற்க முடியாது.

9. மறுமொழி மட்டுறுத்தல் செய்வது எப்படி?

//மறுமொழி மட்டுறுத்தல் என்றால் என்ன எப்படி பண்னுவது//
யாராவது சொல்லிக் கொடுங்களேன் பிளீஸ்!
னு செந்தழலாரோட பதிவுல ஒருத்தர் கேட்டிருந்தார்.

அவருக்கு மட்டும் இல்லாம எல்லாருக்கும் பயன்படும் விதமா தனிப்பதிவா போடுறேன். இதுவும் ஒரு உருப்படியான "எப்படி" பதிவா இருக்கட்டும்.

முதலில் மறுமொழி மட்டுறுத்தல் (Comments Moderation) என்றால் என்ன?

மறுமொழி என்பது உங்கள் பதிவுகளுக்கு வரக்கூடிய பின்னூட்டங்கள். அதாவது Comments. மட்டுறுத்தல் செய்யப்படாத வலைப்பூக்களில்(Blogs) பின்னூட்டங்கள் உடனுடக்குடன் அந்தந்த பதிவுகளில் பிரசுரிக்கப்படும். அது வலைப்பதிவரின் கவனத்து வராமலேயே நடக்கும். இங்கு எவற்றை வைத்துக்கொள்ளலாம், எவற்றையெலாம் நீக்கலாம் என்பனவற்றை பிரசுரித்த பிறகுதான் முடிவு செய்ய முடியும். அதாவது தேவையற்ற பின்னூட்டங்களை பிரசுரித்துவிட்டு பின்னர் அழித்துவிடமுடியும்.

ஆனால் மறுமொழி மட்டுறுத்தல் என்பது பிரசுரிப்பதற்கு முன்பே எவற்றை பிரசுரிக்கலாம்(Publish) எவற்றை பிரசுரிக்க மறுக்கலாம்(Reject) என்று முடிவு செய்து பின்னர் செயல்படுத்தலாம். இதனால் தேவையற்ற பின்னூட்டங்களை பிரசுரத்திற்கு முன்பே வடிகட்டிவிடலாம்.


1.உங்களோட பிளாக்கர் அக்கவுண்ட்ல லாகின் பாண்ணுங்க!

2.நீங்கள் வைத்திருக்கும் பிளாக்குகளின் பட்டியல் டேஷ் போர்டில் வரிசையாக இருக்கும்.3.அந்த பட்டியலில் பிளாக் பெயர், நியூ போஸ்ட், சேஞ்ச் செட்டிங்க்ஸ்னு மூணு பகுதி இருக்கும். பல் சக்கரம் மாதிரி இருக்கும் படமான சேஞ்ச் செட்டிங்க்ஸை கிளிக் பண்ணுங்க!

Photobucket - Video and Image Hosting

4.அதுல பேசிக்,பப்ளிஷிங்க்,ஃபார்மேட்டிங்க், கமெண்ட்ஸ்,ஆர்ச்சிவிங்க், சைட் ஃபீட், இமெயில், மெம்பர்ஸ்னு தலைப்புகள் இருக்கும். நீங்க கிளிக்க வேண்டியது "கமெண்ட்ஸ்" என்னும் தலைப்பை.

Photobucket - Video and Image Hosting

5.அதுல 9வது ஆப்ஷனா "எனேபிள் கமெண்ட் மாடரேஷன்?" என்ற கேள்வியோட "யெஸ்", "நோ" ன்னு ரெண்டு ஆப்ஷன் இருக்கும். "யெஸ்" என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுங்க. அதாவது அந்த வட்டத்துக்குள்ள புள்ளி வைக்கற மாதிரி மவுஸைக் கொண்டு போயி கிளிக் பண்ணுங்க.


6.அதுக்கு கீழே இமெயில் அட்ரஸை எழுத ஒரு டப்பா இருக்கும். நீங்க வருகிற கமெண்ட்ஸெல்லாம் உங்களுக்கு இமையில் மூலமும் தெரிஞ்சிக்கணும்னு விருப்பம் இருந்தா உங்க இமெயில் அட்ரஸை அதுல எழுதுங்க. இல்லாங்காட்டி சும்மா விடுங்க.

Photobucket - Video and Image Hosting

7.அப்புறம் கடைசியா இருக்குற "சேவ் செட்டிங்" என்ற பொத்தானை தட்டி விடுங்க. "செட்டிங்க்ஸ் வேர் சேவ்டு சக்ஸஸ்ஃபுல்லி" ன்னு ஒரு மெஸேஜ் வரும். அப்புறம் "ரீபப்ளிஷ்" எண்டைர் பிளாக்" என்ற பொத்தானை ஒரு முறை தட்டி விடுங்க. அவ்வளவுதான்.


Photobucket - Video and Image Hosting

இதுவரைக்கும் பார்த்தது மறுமொழி மட்டுறுத்தலுக்கான முன்னேற்பாடு (Enabling Comment Moderation Only) மட்டும்தான். வந்த பின்னூட்டங்களை எப்படி வடிகட்டி பிரசுரிப்பது அல்லது நிராகரிப்பது என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம். இதுவரை செய்துவிட்டு தமிழ்மணத்தில் பிளாக் பக்கத்தில் போய் பார்த்தால் மறுமொழி மட்டுறுத்தல் ஏர்பாட்டை அறிவிக்கன்னு ஒரு பதிவு இருக்கும். அங்கே போயி
மறக்காம உங்க வலைப்பூவோட சுட்டியை பின்னூட்டத்தில் போடுவதொட மறுமொழி மட்டுறுத்தல் ஏற்பாடு செய்தாயிற்றுன்னு சொல்லிடுங்க.

Saturday, November 18, 2006

8. வல்லவன் - விழாக்காலச் சலுகை!

வல்லவன் திரைப்படம் பார்த்துவிட்டு வருவோர்க்கு விழாக்காலச் சிறப்பு சலுகையாக கார்த்திகை மாதம் முதலே சொர்க்க வாசல் திறக்கப் படுகிறது.

முற்பிறவிப் பாவங்கள் மற்றும் இப்பிறவிப் பாவங்களுக்கான தண்டனைகள் அனைத்தும் இத்திரைப்படம் பார்ப்பதாலேயே அனுபவிக்கப் பட்டு விடுவதால்
ஒரே குற்றத்திற்கு இரு முறை தண்டிக்கப் படலாகாது என்னும் இந்தியன் பீனல் கோட் குறிப்பிட்டுள்ளபடி இப்படம் பார்த்துவிட்டு தற்கொலை செய்து கொள்வோருக்கு நேரடியாக சொர்க்கலோகத்தில் இடம் ரிசர்வ் செய்யப் படும்.
டிக்கெட் ஒரு முறை வாங்கினால் போதும். (தியேட்டர் கவுண்டரில்).

Friday, November 17, 2006

7. ஆவியுலகக் கண்டனங்கள்!

"டப் டப் "
"யாரது?"
"பேயது"
"என்ன வேண்டும்?"
"நகை வேண்டும்"
"என்ன நகை?"
"கலர் நகை"
"என்ன கலர்?"
"பச்சை கலர்"

இது போன்ற சிறுவர் சிறுமியர்களுக்கான விளையாட்டில் கதவைத் தட்டி நகைகளைக் கொள்ளையடிக்கும் விஷமத்தைச் செய்வது எங்களூர்க் காரர்களான பேய்கள் என்ற தோன்றத்தை உண்டாக்கும் வண்ணம் வசனங்களைச் சொல்லிக் கொடுத்து பிஞ்சுகளின் மனதில் நஞ்சை விதைக்கும் எகத்தாளத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

Friday, November 03, 2006

6. இலவசம்


ஒரு மண்டை ஓடு வாங்கினால்


இரண்டு லெக் பீஸ் இலவசம்.


லிமிடெட் ஆஃபர். ஸ்டாக் உள்ள வரைக்கும்.

Saturday, October 14, 2006

5. இதுதான்யா உண்மை!

இல்லாதவனுக்கு மண்மேடு!


இருக்கறவனுக்கு சமாதி!

இதான் கடைசில! இதுதான் உண்மை!
இதுக்கு நடுவுல எதுக்கு ஏழை, பணக்காரன் என்கிற ஏற்றத்தாழ்வு/அந்தஸ்து எல்லாம்? கடைசில என்னத்தை கொண்டு போறோம்! ஒண்ணும் இல்லை!

Friday, October 13, 2006

4. நாங்களும் கும்மியடிப்போம்

நாங்களும் இப்படித்தான் கும்மியடிப்போம்! வாங்க! நீங்களும் கலந்துக்குங்க!
நம்மூருக்கு புதுசா யாரு வந்தாலும் ராகிங் நடக்கும்!


ரா..ரா...சரசுகு ராரா...ரா ரா.. நந்தகு சோரா....!

பிராணமே(!?) நீதிரா...!


3.காதல் பிசாசு!

உயிழந்த பின்னும்
உறவுகளில் நாட்டம்!
இழந்தது உடலைத்தான்!
உணர்வுகளை அல்ல!

ஆசைகள் அழியாமல்தான்
ஆவிகளாய் அலைகிறோம்!
நிராசைகள் எங்களை
நிர்க்கதி ஆக்கிவிட முடியாது!

மீண்டும் மீண்டும்வருவோம்!
மண்ணுலக ஆசைகள்
எங்களிடம்நிரந்தரமாய்
இருக்கும் வரை!
ஆம்! ஆசைகளும்
இறக்கும் வரை!

2.தோப்புக்குள்ள நாடகம் நடக்குது...!


எத்தினி தபா சொல்லுறது? பகல்ல எல்லாரும் தூங்கினப்புறமா வான்னு?

வலையுலக மானிடர்களே(!?),
இதுவும் ஒரு தடாலடி போட்டிதான். பரிசு நிச்சயம் கிடையாது.
உங்களோட கமெண்ட் கற்பனைக் குதிரையைத் தட்டி விடுங்க!
எல்லாரும் என்ஜாய் பண்ணுலாம்.

Thursday, October 12, 2006

1.மறு பி(இ)றப்பு!

எங்கள் ஊரைச் சேர்ந்த அம்மணியின் ஆர்வக்கோளாறின் காரணமாக பிளாக்கர் பீட்டாவிற்கு அப்டேட் செய்யப்போய் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்ட கதையாயிற்று. எங்களுடைய பழைய வலைப்பூவான ஆவிகள் உலகத்தில் போட்ட புதிய பதிவுகளை தமிழ் மணத்தில் இணைக்கும்போது பிழைச் செய்திகள் வந்தபடியால் மீண்டும் பழையபடி பிளாக்கரிலேயே வேறு வலைப்பூ தொடங்கி விட்டோம்.

இம்முறை பொறுப்பு என் கையில் வழங்கப்பட்டுள்ளது. இனி ஆவி அம்மணி இல்லை. ஆவி அண்ணாச்சி என்று அறியுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொல்கிறேன்.

இன்னும் ஒரு வாரத்திற்குள் பழைய வலைப்பூ அழிக்கப்பட்டுவிடும்.

நான் அமானுஷ்ய ஆவியின் போலி அல்ல என்று நிரூபிக்க இதன்மூலம் துண்டைப் போட்டு தாண்டுகிறேன்.

(ஐடியா உபயம்: ஒரு அனானி அண்ணாச்சி)