"டப் டப் "
"யாரது?"
"பேயது"
"என்ன வேண்டும்?"
"நகை வேண்டும்"
"என்ன நகை?"
"கலர் நகை"
"என்ன கலர்?"
"பச்சை கலர்"
இது போன்ற சிறுவர் சிறுமியர்களுக்கான விளையாட்டில் கதவைத் தட்டி நகைகளைக் கொள்ளையடிக்கும் விஷமத்தைச் செய்வது எங்களூர்க் காரர்களான பேய்கள் என்ற தோன்றத்தை உண்டாக்கும் வண்ணம் வசனங்களைச் சொல்லிக் கொடுத்து பிஞ்சுகளின் மனதில் நஞ்சை விதைக்கும் எகத்தாளத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
Friday, November 17, 2006
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
ஹிஹிஹிஹிஹி.. நீங்க ரொம்ப நல்ல ஆவி
//நீங்க ரொம்ப நல்ல ஆவி//
மிக்க நன்றி வினையூக்கி அண்ணா அவர்களே!
Ungal ulagathil enna solli kodupeergal ? :)
//மிக்க நன்றி வினையூக்கி அண்ணா அவர்களே
//
ஆவி சார், நீங்க எனக்கு இளையவரா???
என்னாங்க ஆவி கண்டனம் ?? நீங்க பார்த்தாலே மனுசங்களுக்கெல்லாம் கண்டம் தானே ;)))
ஆவி அண்ணா,
வசனங்களைச் சொல்லிக் --உங்கள் ஊரில் எழுத்துப் பிழை திருந்தும் ஆவிகளே இல்லையா? ;)
மானிடத் தங்கையே!
தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி!
எங்களூரில் அவ்வளவு ஞானமுள்ளவர்கள் இல்லையே!
//Ungal ulagathil enna solli kodupeergal //
ஹனீஃப் அவர்களே!
எங்கள் ஊரில் உள்ளதை உள்ளபடி சொல்லிக் கொடுப்போம்!
"டப் டப்"
"யாரது?"
"அரசியல்வாதி"
"என்ன வேண்டும்"
"ஓட்டு வேண்டும்"
"என்ன ஓட்டு"
"கள்ள ஓட்டு"
ஆமாம்! இப்படித்தான் சொல்லிக் கொடுப்போம். பின்னே இறந்தவர்களெல்லாம் உங்கள் ஊர் தேர்தல்களில் ஓட்டுப் போகிறார்களே எப்படியாம்?
// நீங்க எனக்கு இளையவரா??? //
வினையூக்கி! மரியாதை நிமித்தம் அண்ணா என்று விளித்தேன்.
சங்கடமாக இருந்தால் கூறுங்கள்.
//என்னாங்க ஆவி கண்டனம் ?? நீங்க பார்த்தாலே மனுசங்களுக்கெல்லாம் கண்டம் தானே ;)))
//
வாங்க ஜொள்ளுப் பாண்டி! அதெல்லாம் அந்தக் காலம்! இப்பவெல்லாம் மனுஷங்களைப் பார்த்து நாங்கதான் பயப்படுறோம்!
:))
உங்க ஜொள்ளுப்பேட்டை நல்லா இருக்குதுங்க!
Post a Comment