Thursday, November 23, 2006

10. பின்னூட்ட மட்டுறுத்தல் - பிரசுரி/நிராகரி

மறுமட்டுறுத்தல் செய்வது எப்படி என்ற முந்தைய பதிவில் மறுமொழி மட்டுறுத்தலை ஏற்பாடு செய்வது எப்படி என்று பார்த்தோம். இப்போது வந்திருக்கும் பின்னூட்டங்களை பிரசுரிப்பது மற்றும் நிராகரிப்பது என்று பார்ப்போம்.

1. உங்கள் பிளாக்கர் அக்கவுண்டில் லாகின் செய்யுங்கள்.

2.நீங்கள் வைத்திருக்கும் பிளாக்குகளின் பட்டியல் டேஷ் போர்டில் வரிசையாக இருக்கும்.அந்த பட்டியலில் பிளாக்(Blog Name) பெயர், நியூ போஸ்ட், சேஞ்ச் செட்டிங்க்ஸ்னு மூணு பகுதி இருக்கும். குறிப்பிட்ட பிளாக் பெயர் இருக்கும் முதல் பகுதியை கிளிக் செய்யுங்கள்.


Photobucket - Video and Image Hosting

3. அங்கே போஸ்டிங் என்ற டேபில்(Tab) கிரியேட், எடிட் போஸ்ட்ஸ், மாடரேட் கமெண்ட்ஸ், ஸ்டேடஸ் என்ற ஆப்ஷன்கள் இருக்கும். அதில் மாடரேட் கமெண்ட்ஸ் என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்யுங்கள்.

Photobucket - Video and Image Hosting

4. அங்கே உங்களுக்கு வந்திருக்கும் இதுவரை பரிசீலிக்கப்படாத பின்னூட்டங்கள் பின்னூட்டங்களை இட்டவர்களின் பெயருடன் பட்டியலிடப்பட்டிருக்கும். பதிவுகள் வாரியாகப் பார்க்கவேண்டுமானால் மேலே உள்ள சார்ட் : போஸ்ட் நேம் என்ற வார்த்தையைக் கிளிக் செய்யுங்கள். அப்போது பதிவுகள் வாரியாக வந்த பின்னூட்டங்கள் காட்டப்படும். பின்னர் ஒவ்வொரு பின்னூட்டத்தின் இடதுபுறம் கறுப்பு நிறத்தில் உள்ள அம்புக்குறியை கிளிக் செய்தால் அப்பின்னூட்டத்தை முழுமையாகக் காணமுடியும்.

Photobucket - Video and Image Hosting

5. இப்போது நீங்கள் பிரசுரிக்க விரும்பும் பின்னூட்டங்களை ஒவ்வொரு பின்னூட்டத்தின் இடது புறத்திலும் கறுப்பு அம்புக்குறிக்கு முன்பாக இருக்கும் சதுரத்திள் மௌஸை வைத்து கிளிக் செய்து தேர்வு செய்து பிரகு கீழே இருக்கும் பப்ளிஷ் என்ற பொத்தானை அழுத்துங்கள்.

இதே போல் நிராகரிக்க வேண்டிய பின்னூட்டங்களையும் தனியே தேர்வு செய்து ரிஜெக்ட் என்ற பொத்தானை அழுத்துங்கள்.

அவ்வளவுதான்.

Photobucket - Video and Image Hosting

டிஸ்கி : பின்னூட்டங்களை அனுமதிக்க அதாவது பிரசுரிக்கவும், நிராகரிக்கவும் கற்றுக் கொண்டீர்கள். இதனை அவரவர் பிளாக்குகளில் மட்டும் செய்யவும். அடுத்தவர் பிளாக்குகளில் சென்று செய்ய முயற்சி செய்யவேண்டாம். அப்படிச் செய்யும் விஷமிகளின் குறும்புத்தனத்திற்கு நான்தான் கற்றுக்கொடுத்தேன் என்ற முறையில் ஆவி அண்ணாச்சியாகிய நான் பொறுப்பேற்க முடியாது.

6 comments:

said...

ஆவி என் பேரு இருக்கு.. நம்ம பேரு மத்த இடத்துல பார்க்கிறது ஒப்ரு சந்தோசம் தான்

said...

ஆவி அண்ணாச்சி,

என்னோட பின்னூட்டம், மாடுரேசனில் இருக்கு, பப்ளிஸ் பண்ணவில்லையே !
:(

மந்திரவாதியை கூப்பிடவா ?
:)

said...

அருமை ஆவியாரே !!!!

said...

அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள் எங்களின் வலைபதிவுகள் எத்தனை மறு மொழிகள் இறுந்தாலும் திரட்டப்படுவதில்லையே.. தெரியவும் இல்லையே, இதில் ஏதேனும் அரசியல் இறுக்கிறாதா, ஆவியார் ஆராய்ந்து அதற்க்கும் ஓர் நல்ல பின்னூட்டம் இடுங்களேன்.

பூதம் இது மாத்துருபூதம் இல்லை

said...

சரி உங்க உலகத்துல எங்க பேரையும் பார்ப்பாங்களா?. அப்படின்னா என் பேரையும் போட்டதுக்கு நன்றிகள் பல..

said...

ரொம்ப நாளா அது எதுக்கு என்பதே இவ்வளவு நாளா தெரியாம இருந்துட்டேன்.
ரொம்ப நன்றிங்க, ஆவியாரே!