Wednesday, November 29, 2006

12 . லொடுக்குப் பாண்டியின் நப்பாசை!

இன்றேனும்
வெல்லுமோ
இந்திய அணி!

அன்றி
இன்றும்
போகுமோ
மானம்தான்
ராக்கெட்டில்!

என்றுமே
பாராத
பாராளுமன்றம்
கூட
கவலை கொண்ட
விஷயமிது!

ஆடும்
அணியில்
போதாதோ
பதினொருவர்!

அணியினரோ
ஆமாம்
என்கின்றனர்!
மீதம் உள்ள
40 ஓவர்களுக்கும்
வேண்டுமாம்
வீரர்கள்!

ஆடுகளம் சரியில்லை!
தட்பவெப்பம் சரியில்லை!
அனுபவங்களும் போதவில்லை!
போதாதென்று இன்று
அரசியலும்
சரியில்லை!
பாவம்!
என்னதான் செய்வார்கள்
வீரர்களும்!

இன்றென்ன காரணமோ?
எப்போதேனும் இவையெல்லாம்
சரியாய் அமைந்து
எதிரணியின் வீரர்களும்
சோர்ந்திருந்தால்
அன்றுதான்
வருவாரோ வருண
பகவானும்தான்!

எடுக்கும் ஓட்டங்களின்
எண்ணிகை அதிகம்
வேண்டுமென்பதை
நாம் ஃபீல்டிங்க்
செய்யும்போது
என்று ஏன்
தவறாய்ப்
புரிந்து கொள்கின்றனர்?

இப்படியே போனால்..!
ஜிம்பாப்வே,
வங்கதேசம்,
கென்யா,
அரேபிய அணிகள்
எல்லாம் இந்தியாவில்
சுற்றுப் பயணம்
மேற்கொண்டு
ஒரு நாள் போட்டிகளில்
விளையாட
விருப்பம் தெரிவிக்கக் கூடும்!
போட்டி போட்டுக் கொண்டு!

என்றுதான்
நிறைவேறுமோ
லொடுக்குப் பாண்டியின்
நப்பாசை!

10 comments:

said...

scoreboard ஐ
பாருமய்யா 23/2
பேட்ஸ்மேன்கள்
மனதுவைத்தால்
ஆறுதலாவது
அடைவேமய்யா

(மேக்கப் போட்டுட்டு வரக்கூடாது எந்திச்சி அப்பிடியே வ்ந்திருக்கீய)

said...

//பேட்ஸ்மேன்கள்
மனதுவைத்தால்
ஆறுதலாவது
அடைவேமய்யா
//

இறையடியான் அவர்களே!
ஒவ்வொரு மேட்சிலும் பவுலர்கள் அல்லது பேட்ஸ்மேன்கள் யாரேனும் மனது வைத்தால் ஆறுதல் அடையலாம்
என்கிறோம். ஏன் பதினொரு பேருமே மனது வைத்து ஆளுக்கு சிறு துரும்பு நகர்த்தினால் கூட போதுமே!

said...

//(மேக்கப் போட்டுட்டு வரக்கூடாது எந்திச்சி அப்பிடியே வ்ந்திருக்கீய)
//

ஆவின்னு பேரை வெச்சிகிட்டு அழகா வந்த மதிக்க மாடேங்குறாங்களே ஐயா!

said...

என்னை வச்சி காமெடி கீமெடி பண்ணலையே?

said...

வர்ரோம்ல கொஞ்சம் பொறுமையா இருங்க.

said...

இதெல்லாம் தெரிஞ்சுதான் நைசா நான் களண்டுக்கிட்டேன்.

said...

ஆஹா. காக்கா உக்கார பணங்கா விழுந்த கதையா போச்சே.

said...

யாராலும் என்னை அசைக்க முடியாது. நான் இப்போதைக்கு டீமை விட்டு போரதா இல்லை.

said...

லல்லு, உனக்கிருக்கா தில்லு.
இருந்தா பிட்சுல வந்து நில்லு.

said...

fantastique aavi saar...