Thursday, November 23, 2006

9. மறுமொழி மட்டுறுத்தல் செய்வது எப்படி?

//மறுமொழி மட்டுறுத்தல் என்றால் என்ன எப்படி பண்னுவது//
யாராவது சொல்லிக் கொடுங்களேன் பிளீஸ்!
னு செந்தழலாரோட பதிவுல ஒருத்தர் கேட்டிருந்தார்.

அவருக்கு மட்டும் இல்லாம எல்லாருக்கும் பயன்படும் விதமா தனிப்பதிவா போடுறேன். இதுவும் ஒரு உருப்படியான "எப்படி" பதிவா இருக்கட்டும்.

முதலில் மறுமொழி மட்டுறுத்தல் (Comments Moderation) என்றால் என்ன?

மறுமொழி என்பது உங்கள் பதிவுகளுக்கு வரக்கூடிய பின்னூட்டங்கள். அதாவது Comments. மட்டுறுத்தல் செய்யப்படாத வலைப்பூக்களில்(Blogs) பின்னூட்டங்கள் உடனுடக்குடன் அந்தந்த பதிவுகளில் பிரசுரிக்கப்படும். அது வலைப்பதிவரின் கவனத்து வராமலேயே நடக்கும். இங்கு எவற்றை வைத்துக்கொள்ளலாம், எவற்றையெலாம் நீக்கலாம் என்பனவற்றை பிரசுரித்த பிறகுதான் முடிவு செய்ய முடியும். அதாவது தேவையற்ற பின்னூட்டங்களை பிரசுரித்துவிட்டு பின்னர் அழித்துவிடமுடியும்.

ஆனால் மறுமொழி மட்டுறுத்தல் என்பது பிரசுரிப்பதற்கு முன்பே எவற்றை பிரசுரிக்கலாம்(Publish) எவற்றை பிரசுரிக்க மறுக்கலாம்(Reject) என்று முடிவு செய்து பின்னர் செயல்படுத்தலாம். இதனால் தேவையற்ற பின்னூட்டங்களை பிரசுரத்திற்கு முன்பே வடிகட்டிவிடலாம்.


1.உங்களோட பிளாக்கர் அக்கவுண்ட்ல லாகின் பாண்ணுங்க!

2.நீங்கள் வைத்திருக்கும் பிளாக்குகளின் பட்டியல் டேஷ் போர்டில் வரிசையாக இருக்கும்.



3.அந்த பட்டியலில் பிளாக் பெயர், நியூ போஸ்ட், சேஞ்ச் செட்டிங்க்ஸ்னு மூணு பகுதி இருக்கும். பல் சக்கரம் மாதிரி இருக்கும் படமான சேஞ்ச் செட்டிங்க்ஸை கிளிக் பண்ணுங்க!

Photobucket - Video and Image Hosting

4.அதுல பேசிக்,பப்ளிஷிங்க்,ஃபார்மேட்டிங்க், கமெண்ட்ஸ்,ஆர்ச்சிவிங்க், சைட் ஃபீட், இமெயில், மெம்பர்ஸ்னு தலைப்புகள் இருக்கும். நீங்க கிளிக்க வேண்டியது "கமெண்ட்ஸ்" என்னும் தலைப்பை.

Photobucket - Video and Image Hosting

5.அதுல 9வது ஆப்ஷனா "எனேபிள் கமெண்ட் மாடரேஷன்?" என்ற கேள்வியோட "யெஸ்", "நோ" ன்னு ரெண்டு ஆப்ஷன் இருக்கும். "யெஸ்" என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுங்க. அதாவது அந்த வட்டத்துக்குள்ள புள்ளி வைக்கற மாதிரி மவுஸைக் கொண்டு போயி கிளிக் பண்ணுங்க.


6.அதுக்கு கீழே இமெயில் அட்ரஸை எழுத ஒரு டப்பா இருக்கும். நீங்க வருகிற கமெண்ட்ஸெல்லாம் உங்களுக்கு இமையில் மூலமும் தெரிஞ்சிக்கணும்னு விருப்பம் இருந்தா உங்க இமெயில் அட்ரஸை அதுல எழுதுங்க. இல்லாங்காட்டி சும்மா விடுங்க.

Photobucket - Video and Image Hosting

7.அப்புறம் கடைசியா இருக்குற "சேவ் செட்டிங்" என்ற பொத்தானை தட்டி விடுங்க. "செட்டிங்க்ஸ் வேர் சேவ்டு சக்ஸஸ்ஃபுல்லி" ன்னு ஒரு மெஸேஜ் வரும். அப்புறம் "ரீபப்ளிஷ்" எண்டைர் பிளாக்" என்ற பொத்தானை ஒரு முறை தட்டி விடுங்க. அவ்வளவுதான்.


Photobucket - Video and Image Hosting

இதுவரைக்கும் பார்த்தது மறுமொழி மட்டுறுத்தலுக்கான முன்னேற்பாடு (Enabling Comment Moderation Only) மட்டும்தான். வந்த பின்னூட்டங்களை எப்படி வடிகட்டி பிரசுரிப்பது அல்லது நிராகரிப்பது என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம். இதுவரை செய்துவிட்டு தமிழ்மணத்தில் பிளாக் பக்கத்தில் போய் பார்த்தால் மறுமொழி மட்டுறுத்தல் ஏர்பாட்டை அறிவிக்கன்னு ஒரு பதிவு இருக்கும். அங்கே போயி
மறக்காம உங்க வலைப்பூவோட சுட்டியை பின்னூட்டத்தில் போடுவதொட மறுமொழி மட்டுறுத்தல் ஏற்பாடு செய்தாயிற்றுன்னு சொல்லிடுங்க.

22 comments:

said...

உழைப்பு...அருமை ஆ.அ அவர்களே...கொஞ்சம் கூட சோம்பேறித்தனம் படாம, அழகா கொடுத்திருக்கீங்க...

said...

நன்றி செந்தழல் ரவி அவர்களே!

said...

ஆவியின் சேவை பளாக்கருக்கு தேவை !
:)

said...

இதுவரை பார்த்த "எப்படி" களில் இதுமட்டுமே உருப்படி.

said...

நீங்க ரொம்ப "டெக்னிகல்லி வெல் வெர்ஸ்ட்" ஆவி போல ஹிஹிஹிஹிஹி

said...

ஆவி அண்ணாச்சி அந்த கேள்விய தல கிட்ட நான் தான் கேட்டேன் ஆனா நான் beta accountnu oru new accountla irukken அதில் under "savings were saved successfullyக்கு கீழ ஒன்னுமே இல்ல. இன்னொரு விஷயம் ஒன்ஸ் என்னோட பதிவுகள் தமிழ்மணம் ல வந்த பிறகு இல்ல reject aana piragu how can i send my other articles. ப்ளீஸ் அண்ணாச்சி ஹெல்ப் மீ.

said...

//ஆவியின் சேவை பளாக்கருக்கு தேவை !
//

மிக்க நன்றி கோவி.கண்ணன் அவர்களே!

(ஆமா! நீங்க அடிக்கடி 'கோவி'ச்சிக்குவீங்களா?)

said...

//இதுவரை பார்த்த "எப்படி" களில் இதுமட்டுமே உருப்படி//

மிக்க நன்றி ஸயீத்!

said...

//மறுமொழி மட்டுறுத்தல் செய்வது எப்படி?" //

ஆஹா! ஆவிகளுக் குதிச்சிருச்சே கோதாவுல!

said...

//நீங்க ரொம்ப "டெக்னிகல்லி வெல் வெர்ஸ்ட்" ஆவி போல //

வினையூக்கி! ரொம்பவெல்லாம் கிடையாது! ஏதோ நமக்குத் தெரிஞ்ச வரை சொல்லிக் கொடுப்பமே!

//ஹிஹிஹிஹிஹி//

ஆமா! கடைசில எதுக்கு அப்படி சிரிக்கிறீங்க! எனக்கு பயமா கீதுப்பா!

said...

ஐயா! தண்டர் நம்பி!
என்னைய ஆளை விடுங்க!

உங்களுக்கு சொல்லிக் கொடுத்ததை உங்க பின்னூட்டத்துக்கே பயன்படுத்த வேண்டியதா போச்சு!

said...

// reject aana piragu how can i send my other articles//

தமிழ் மணத்துலேர்ந்து ரிஜெக்ட் ஆன பிறகு நீங்க தமிழ்மணத்துக்கு தான் அனுப்ப முடியாது.

நீங்க பாட்டுக்கு உங்க பிளாக்குல எழுதிகிட்டு இருக்கலாம்.

தனிமனிதத் தாக்குதல்களை விட்டுட்டு வேற ஏதாவது உபயோகமா, ஆக்கப்பூர்வமா, அல்லது பிறரை சிரிக்க வைக்கவாவது (இதுல மூணாவதுதான் நாங்க பண்ணுறது) நல்லபடியா எழுதுங்க.

அப்புறம் திரும்ப தமிழ்மணத்துல இணைப்பு கொடுக்க முயற்சி செய்யுங்க!

பீட்டா பிளாக்கர் பத்தி ஏதாவது தெரிஞ்சிக்கணும்னா பொன்ஸ் அக்காகிட்டே போய் கேளுங்க! அவங்கதான் பீட்டாவுல சோதனையெல்லாம் செஞ்சிகிட்டு இருந்தாங்க!

said...

ஆவி அண்ணாச்சி நல்ல புதியவர்களுக்கு பய்ன்படக்கூடிய ஒரு பதிவு!!!

ஆவியாரிடமிருந்து இது போன்ற உருப்படியான பதிவுகளை நான் எதிர்பார்க்கவில்லை! இந்தப் பதிவு போட்டதை வன்மையாக கொலைவெறியோடு கண்ணடிக்கிறோம்!
:))))


அன்புடன்...
சரவணன்.

said...

இதுவரை செய்துவிட்டு தமிழ்மணத்தில் பிளாக் பக்கத்தில் போய் பார்த்தால் மறுமொழி மட்டுறுத்தல் ஏர்பாட்டை அறிவிக்கன்னு ஒரு பதிவு இருக்கும்.

-Can u help me where it is?

said...

பொன்ஸ் அக்கா!
நீங்க ப்ளாக்கர் பீட்டாவுல சோதனை பண்றீங்களாமே.

எலிய வச்சா? இல்ல முயல் வச்சா?

said...

அதென்னங்க!
பதிவோட தலைப்புக்கு முன்னாடி ஒரு நம்பர் வருது?

said...

//மறுமொழி மட்டுறுத்தல் ஏர்பாட்டை அறிவிக்கன்னு ஒரு பதிவு இருக்கும்.

-Can u help me where it is?
//

சந்தன முல்லை, இதோ

தமிழ்மணத்தில் மறுமொழி மட்டுறுத்தல் ஏற்பாட்டை அறிவிக்கும் பதிவு

said...

//அதென்னங்க!
பதிவோட தலைப்புக்கு முன்னாடி ஒரு நம்பர் வருது?//

கார்மேக ராஜா,

அது பதிவுகளின் வரிசை எண். எத்தனை பதிவுகள் இட்டிருக்கிறோம் என்று எளிதில் கணக்கிட வசதியாக இருக்கும்.

நிறைய வலைப் பூக்களில் பார்த்திருப்பீர்களே!

said...

//எலிய வச்சா? இல்ல முயல் வச்சா?//

ஓவர் டூ பொன்ஸ்!

said...

//ஆவி அண்ணாச்சி நல்ல புதியவர்களுக்கு பய்ன்படக்கூடிய ஒரு பதிவு!!!//

மிக்க நன்றி எங்கள் நண்பன்.

//ஆவியாரிடமிருந்து இது போன்ற உருப்படியான பதிவுகளை நான் எதிர்பார்க்கவில்லை! இந்தப் பதிவு போட்டதை வன்மையாக கொலைவெறியோடு கண்ணடிக்கிறோம்!
//

ஐயோ! கண்ணடிக்கிறதே தப்பு! இதுல கொலைவெறி வேறயா?

கச்ண்ணடிப்பதற்கு இது இடமல்ல! அதற்கு ஆவி அம்மணி இருக்கிறார். அங்கே போய் கண்ணடிக்கவும்.

:))

said...

//ஆஹா! ஆவிகளுக் குதிச்சிருச்சே கோதாவுல!
//

பின்னே! எல்லாரும் போடும்போது நாங்க மட்டும் பபோடாம இருந்தா எப்படி?

(அடச்சே இங்கயும் "எப்படியா"?)

said...

//ஆவி அம்மணி இருக்கிறார். அங்கே போய் கண்ணடிக்கவும்.
//

ஆமாம்! தாராளமாகக் கண்ணடிக்கவும்.

எங்களுக்கு கண் வறுவல் என்றால் மிகவும் பிடிக்கும். அதற்குத் தயாரா என்பதை ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக் கொள்ளவும்.

(அண்ணாச்சி! சேம் சைட் கோல் போடறீங்க!)