Monday, February 19, 2007

22 : ஆவிகள் ஏற்றிய சுடர் - அல்வா!

எவ்வித அழைப்புமின்றி இரண்டாவது சுடர் ஏற்றப்பட்டது எனவும், அது விதிமுறைகளுக்கு முரண்பட்டது எனவும் தெரிய வந்தமையால் ஆவிகள் உலகம் தமது சுடர் பதிவை நீக்கிவிடுகிறது.

அத்துடன் ஆவியுலகின் வருத்தங்களையும் தெரிவித்துக் கொண்டு எமது பதிவை சுடர் பட்டியலில் இருந்து நீக்கி விடுமாறு தேன்கூடு நிர்வாகத்திடம் அன்புடன் கேட்டுக் கொள்கிறது.


பார்க்க :

சுடர் - கை மாறியதா - சர்வேசன்

சுடர் - தெளிவான விதிமுறைகள் - வெட்டிப் பயல்

நன்றி!

Saturday, February 17, 2007

21 : எலும்பை எண்ணிடுவேன்!

நான் இருந்த ஒரு தெருவுல ஒருத்தன் எப்பப் பார்த்தாலும் யார்கிட்டயும் மரியாதை இல்லாம "எலும்பை எண்ணிடுவேன், எலும்பை எண்ணிடுவேன்"னு சொல்லிகிட்டிருந்தான். நாங்களும் ரொம்ப நாளா பார்த்தோம். அவன் வயசு வித்தியாசமெல்லாம் பார்க்காம எல்லார்கிட்டயும் இப்படியே சொல்லி வந்தான்.


இவனுக்கு சரியான பாடம் புகட்டும்னு எங்க உலகத்துல்ல முடிவு பண்ணி எங்க ஆளு ஒருத்தனை மனுச ரூபத்துல அந்த தெருவுக்கு அனுப்பி வெச்சோம். அன்னிக்கும் அவர் தெருவுல ஒரு சண்டைல வழக்கம் போல கத்திகிட்டு இருந்தான்.


நம்ம ஆளு அவன்கிட்ட போயி "ஏம்பா! இப்படி பிரச்சினை பண்ணுறே? இதெல்லாம் சரி இல்லை" ன்னு சொல்ல அவனோ நம்ம ஆளுகிட்டயும்


"யோவ் போய்யா உன் வேலையப் பாத்துகிட்டு, இல்லே உன் எலும்பை எண்ணிடுவேன்" ன்னு சொன்னான்.


நம்ம ஆளு அமைதியா

"அப்படியா வா கொஞ்சம் அந்தப் பக்கம் போய் பேசுவோம்" னு சொல்லி அவனைத் தனியா இட்டாந்து


"எலும்பை எண்ணுறதாச் சொன்னியே! எங்கே! எனக்கு எத்தனை எலும்புன்னு கொஞ்சம் எண்ணிச் சொல்லேன்" அப்படின்னு தன்னோட சுயரூபத்தை இப்படி


காட்ட அரண்டு போன அவன் அன்னியிலேர்ந்து "எலும்பை எண்ணிடுவேன்னு சொல்றதை விட்டான்.

Friday, February 16, 2007

20 : பாலபாரதிதான் சொல்லிக் கொடுத்தாரு!

இந்த ஹைக்கூ எழுதுறதைப் பத்தி அண்ணன் பாலபாரதி சொல்லிக் கொடுத்தாரேன்னு நாங்களும் கொஞ்சம் முயற்சி பண்ணினோம்!


பல்லக்குப் பயணம்!
ஆசை நிறைவேறியது!
பாடையில் நான்!


காத்திருக்கத் தேவையில்லை
முன்பதிவுக்கு
இறுதிப் பயணம்!


அந்தஸ்து காரணமாய்
நெருங்காமலிருந்தவர்கள்
அருகருகே சமாதிகளில்!

(இப்ப சொல்லுங்க நாங்களும் பா.க.ச வில் இருக்கிறோம்தானே)

இவண்,

ஆன்லைன் ஆவிகள்,
ஆவியுலக தலைமை கிளை.
பதிவு எண் : 131313/8

19 : நாங்களும் மாறிட்டோம்

(எதுகை மோனைக்காக நாங்களும் நாறிட்டோம் னு படிக்கப் படாது சொல்லிட்டோம்)எங்க ஊர்க்காரவுக படங்களைப் பார்த்து சில பேரு பயப்படுறதா பின்னூட்டங்களில் சொல்லியிருந்தாங்க. அதுனால எங்களுக்கென்னன்னு அப்படியேதான் விட்டிருந்தோம். ஆனா நேத்து பாருங்க கோடம்பாக்கம் பக்கத்துல உலவிகிட்டிருந்தப்போ ஒரு மேக்கப் போடாத நடிகையைப் பார்த்தோம். அப்பதான் எங்களைப் பார்த்து பயந்து போனதா சொன்னவங்களோட கஷ்டம் எங்களுக்கு உறைச்சுது. தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தாத்தான் தெரியும்னு சும்மாவா சொன்னாங்க!அதான் நாங்க எங்களோட புரொஃபைல் படத்தை இன்னியிலேர்ந்து இப்படி மாத்திகிட்டோம். இனி யாரும் பயப்பட மாட்டீங்கன்னு நினைக்கிறோம்.படம் எங்க பேருக்கு பொருத்தமா இருக்குதுல்ல?

Wednesday, February 14, 2007

18 : எங்களுக்கும் காதல் வரும்!


எங்களுக்கும் காதல் வரும்
காதல் வந்தால் கவுஜ வரும்
கவுஜ வந்தால் அனைவரையும்
கழுத்தறுப்போமே!
கவுஜ 1 :
எலும்பு உடலுக்குள்ளும்
மனசு ஒண்ணு
இருக்குதென்று
கொண்டு வந்து கொடுத்தாயோ!
ஒற்றை ரோஜாப் பூ!
கவுஜ 2 :
உயிரையெ கொடுப்பேன்னு
உதாரெல்லாம் விடமாட்டே!
உண்மையானவன் நீதாண்டா!
பிடிச்சிக்கோடா காதல் ரோஜா!