Saturday, February 17, 2007

21 : எலும்பை எண்ணிடுவேன்!

நான் இருந்த ஒரு தெருவுல ஒருத்தன் எப்பப் பார்த்தாலும் யார்கிட்டயும் மரியாதை இல்லாம "எலும்பை எண்ணிடுவேன், எலும்பை எண்ணிடுவேன்"னு சொல்லிகிட்டிருந்தான். நாங்களும் ரொம்ப நாளா பார்த்தோம். அவன் வயசு வித்தியாசமெல்லாம் பார்க்காம எல்லார்கிட்டயும் இப்படியே சொல்லி வந்தான்.


இவனுக்கு சரியான பாடம் புகட்டும்னு எங்க உலகத்துல்ல முடிவு பண்ணி எங்க ஆளு ஒருத்தனை மனுச ரூபத்துல அந்த தெருவுக்கு அனுப்பி வெச்சோம். அன்னிக்கும் அவர் தெருவுல ஒரு சண்டைல வழக்கம் போல கத்திகிட்டு இருந்தான்.


நம்ம ஆளு அவன்கிட்ட போயி "ஏம்பா! இப்படி பிரச்சினை பண்ணுறே? இதெல்லாம் சரி இல்லை" ன்னு சொல்ல அவனோ நம்ம ஆளுகிட்டயும்


"யோவ் போய்யா உன் வேலையப் பாத்துகிட்டு, இல்லே உன் எலும்பை எண்ணிடுவேன்" ன்னு சொன்னான்.


நம்ம ஆளு அமைதியா

"அப்படியா வா கொஞ்சம் அந்தப் பக்கம் போய் பேசுவோம்" னு சொல்லி அவனைத் தனியா இட்டாந்து


"எலும்பை எண்ணுறதாச் சொன்னியே! எங்கே! எனக்கு எத்தனை எலும்புன்னு கொஞ்சம் எண்ணிச் சொல்லேன்" அப்படின்னு தன்னோட சுயரூபத்தை இப்படி






காட்ட அரண்டு போன அவன் அன்னியிலேர்ந்து "எலும்பை எண்ணிடுவேன்னு சொல்றதை விட்டான்.

11 comments:

said...

நான் வரலை இந்த ஆட்டத்துக்கு!:-)))

ஒரு நபர் தன் நண்பனிடம் கேட்டானாம்: "ஏண்டா, பேயைப் பாத்திருக்கிYஆ? அது பட்தி நீ என்ன நினைக்கிறே?

அவன் தயங்காமல் உட்னே சொன்னான்: " பாத்துருக்கியாவா..?
அஞ்சு வருசமா குடும்பம் நட்த்திக்கிட்டிரிக்கேன்டா!"

said...

எங்க ஏரியா போலிஸ்காரரு எப்ப பாத்தாலும் முட்டிக்கு முட்டி தட்டிடுவேன்னு பயமுறுத்தராரு!

அவர என்னான்னு செத்த கேளுங்கோ ஆவி சார்!

said...

Hai.....Ipdilam aal anuppuveengala.... oru tharam ipdi mirattitu poga enna vaanguveenga.....

Iniyaal

said...

Hai ipdilam aal anupuveengala...
oru murai ipdi vanthu bayamburuththa evlavu vasool pannuveenga.....

Iniyal

said...

//நான் வரலை இந்த ஆட்டத்துக்கு!:-)))//

:))

//அவன் தயங்காமல் உட்னே சொன்னான்: " பாத்துருக்கியாவா..?
அஞ்சு வருசமா குடும்பம் நட்த்திக்கிட்டிரிக்கேன்டா//

இது நல்லா இருக்கு சார்!
இது கதைதானா! இல்லை வீட்டுல பார்த்துட்டா வம்புன்னு இப்படி கதையாச் சொல்றீங்களா?

said...

//எங்க ஏரியா போலிஸ்காரரு எப்ப பாத்தாலும் முட்டிக்கு முட்டி தட்டிடுவேன்னு பயமுறுத்தராரு!

அவர என்னான்னு செத்த கேளுங்கோ ஆவி சார்!
//

போலீஸ் காரங்க எல்லாம் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற அப்படி சொல்வார்கள். அவர்களிடம் வம்பு வெச்சிக்கக் கூடாது தம்பி!

:))

said...

// oru tharam ipdi mirattitu poga enna vaanguveenga.....
//

இனியாள்,

Per Call Basis ல சார்ஜ் பண்ணுவோம்.

Rs 500 / Call.

said...

Helo!
Very, very good
Tank you

said...

இங்கு ப்ளொக்கில் கூட ஒருத்தர் இப்படி சொல்லிட்டி இருக்காங்க...என்னென்ன பார்க்கிறிங்களா ஆவிஸ்

said...

//Helo!
Very, very good
Tank you //

Thanks Mr. David Santos!

said...

//இங்கு ப்ளொக்கில் கூட ஒருத்தர் இப்படி சொல்லிட்டி இருக்காங்க...என்னென்ன பார்க்கிறிங்களா ஆவிஸ் //

அப்படியா யார் அது தூயா?

(என்னை வெச்சி காமெடி கீமெடி ஏதும் பண்ணலையே?)