Monday, March 26, 2007

அப்பாடா!

அநியாயத்துக்கு பெர்முடாவும் ஒருவேளை ஜெயிக்கும், இந்தியா சூப்பர் 8 ல் நுழையும்னு நம்பிக்கை வெச்சிருந்த ரசிகக் கண்மணிகளா,

பங்களா தேஷ் அணியே இன்னிக்கும் ஜெயிச்சி, உங்க கொஞ்ச நஞ்ச நம்பிக்கைக்கும் முற்றுப் புள்ளி வெச்சிடுச்சு.

இனி ரன் ரேட் கணக்கெல்லாம் போட்டுகிட்டு இருக்காம, அவங்கவங்க பொழப்புக்குண்டான வழியைப் பார்ப்போம்!

Saturday, March 24, 2007

உலகக் கோப்பை....................!?

COME ON INDIA


"இனிமே கிரிக்கெட் பாப்பியா... கிரிக்கெட் பாப்பியா?

"ம்ஹும். எத்தினி தடவை பட்டாலும் உனக்கெல்லாம் புத்தி வராதே!"

Monday, March 19, 2007

மேகம் கருக்குது மழை வரப் பாக்குது!

மேகம் கருக்குது
மழை வரப் பாக்குது
வீசியடிக்குது காத்து!
மழைக் காத்து!

இன்னிக்கு இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் பெர்முடா அணிக்கெதிரா உலகக் கோப்பை போட்டிகளில் ஒரு அதிக பட்ச ஸ்கோர் (413/5) என்ற புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இந்திய அணியினரின் வங்க தேசத்துக்கெதிரான படுதோல்வியால் எழுந்த விமர்சனங்களுக்கும் ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிட்டாயிற்று. (தற்காலிகமாக). சும்மா சொல்லக் கூடாது. சேவாக், கங்குலி, டெண்டுல்கர், யுவராஜ் ஆகியோர் பொறுப்புணர்ந்து ஆடி இருக்கிறார்கள். (அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் என்ற பழமொழி நினைவுக்கு வருதே)

அதெல்லாம் சரி! இந்தியா உருப்படியா நல்லா விளையாடும்போது அப்படியே வானத்தைக் கொஞ்சம் அண்ணாந்து பார்த்தா அடிவயிறு கலக்குது. அப்படியே மேலே இருக்குற பாட்டை உதடு தானாக பாடத் துடிக்குது. இந்தியாவின் வெற்றி இயற்கைக்கே பிடிப்பதில்லை என்பதை ஏற்கனவே பலமுறை பார்த்திருக்கிறோம். நம்ம ஆவி அம்மணி இங்கே கணிச்ச மாதிரி மழை வந்து கெடுத்திடுமோன்னு பயமா இருக்குதுங்க!

மழை தருமோ என் மேகங்கள்..... னு கூட ஒரு பாட்டு இருக்கு. அந்தப் பாட்டை இப்ப ஏனோ ரசிக்க முடியலை!

ஆவி அம்மணியின் கணிப்புகள் சில:

1. இந்திய அணியைப் பொறுத்தவரை அரையிறுதிச் சுற்றுவரை அழைத்துச் செல்லும் வீரர்களாக பொறுப்புடன் விளையாட இருப்பவர்கள்.கங்குலி, சேவாக், ஹர்பஜன் சிங்.

2.சச்சின் ஓரிரு அரை சதம்/சதங்களைப் பூர்த்தி செய்தாலும் எல்லா ஆட்டங்களிலும் அவரது பங்களிப்பு சிறப்பாக இருக்கும் என்பது சந்தேகமே!

3. குறைந்த பட்சம் ஒரு போட்டியாவது குறைந்த பட்சம் 5 முதல் 10 ஓவர்கள் மழையால் பாதிக்கப் படும்

4. இந்திய அணி முக்கியமான விளையாட்டு ஒன்றை டக்ளஸ்வெர்த் முறையின் மூலம் இழக்க நேரிடும். அதுவே அடுத்த சுற்றிற்கு செல்வதில் இருந்து முற்றுப் புள்ளி வைக்கக் கூடும்.

4 வது கணிப்பு இன்னிக்குத் தேறாது. ஆனா ஒரு 25 ஓவர் விளையாடும் வரைக்கும் இயற்கை இன்னிக்கு இந்திய அணிக்கு கருணை காட்டுமா?

பொறுத்திருந்து பார்போம்!

Saturday, March 17, 2007

வாழ்வா சாவா போராட்டம் - தப்புமா இந்தியா?

சற்று நேரத்திற்கு முன்பு வரை 72/3 என்று ஆடிக்கொண்டிட்ருந்த அணி கேப்டன் டிராவிட்டும் எல்.பி.டபிள்யூ முறையில் சொற்ப ரன்களில்(14) வெளியேற கொஞ்சம் கவலைக்கிடமான நிலையில்தான் உள்ளது என்றே சொல்ல வேண்டும்.

உலகக் கோப்பை 2007 போட்டிகளில் இந்திய அணியின் முதல் ஆட்டத்தில் இன்று பங்களாதேச அணியுடன் மோதுகிறது. சின்ன அணி என்று சொல்லப் படும் பங்களா தேச அணியுடனே இப்படி ஆடினால், மீதமிருக்கும் இலங்கை அணியுடனான போட்டியின் ரிசல்ட் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. ஆக இந்தப் போட்டி மற்றும் பெர்முடா அணியுடன் மோதும் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்றால்தான் உண்டு என்ற நிலையில் சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைய இந்திய அணியைப் பொறுத்தவரை ஒவ்வொரு போட்டியுமே வாழ்வா சாவா போட்டியாகத்ததன் இருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

இந்தப் போட்டியில் 230 ரன்களை இந்திய அணி கடக்குமானால் வங்கதேச அணிக்குக் கொஞ்சம் கடுமையான இலக்கை கொடுக்கலாம்.

ஆவியுலக கணிப்புப் படி இந்திய அணியின் ஸ்கோர் 211. மே ஆர் மே நாட் பி ஆல் அவுட்.

மக்கள் திரும்பி வரச் சொல்லி அழைக்கிறார்கள் என்று இந்திய வீரர்கள் தவறாகப் புரிந்துகொள்வததத் தவிர்க்க தயவு செய்து யாரும் கமான் இண்டியா என்று உற்சாகக் குரல் கொடுக்காதீர்கள்.