Saturday, March 17, 2007

வாழ்வா சாவா போராட்டம் - தப்புமா இந்தியா?

சற்று நேரத்திற்கு முன்பு வரை 72/3 என்று ஆடிக்கொண்டிட்ருந்த அணி கேப்டன் டிராவிட்டும் எல்.பி.டபிள்யூ முறையில் சொற்ப ரன்களில்(14) வெளியேற கொஞ்சம் கவலைக்கிடமான நிலையில்தான் உள்ளது என்றே சொல்ல வேண்டும்.

உலகக் கோப்பை 2007 போட்டிகளில் இந்திய அணியின் முதல் ஆட்டத்தில் இன்று பங்களாதேச அணியுடன் மோதுகிறது. சின்ன அணி என்று சொல்லப் படும் பங்களா தேச அணியுடனே இப்படி ஆடினால், மீதமிருக்கும் இலங்கை அணியுடனான போட்டியின் ரிசல்ட் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. ஆக இந்தப் போட்டி மற்றும் பெர்முடா அணியுடன் மோதும் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்றால்தான் உண்டு என்ற நிலையில் சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைய இந்திய அணியைப் பொறுத்தவரை ஒவ்வொரு போட்டியுமே வாழ்வா சாவா போட்டியாகத்ததன் இருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

இந்தப் போட்டியில் 230 ரன்களை இந்திய அணி கடக்குமானால் வங்கதேச அணிக்குக் கொஞ்சம் கடுமையான இலக்கை கொடுக்கலாம்.

ஆவியுலக கணிப்புப் படி இந்திய அணியின் ஸ்கோர் 211. மே ஆர் மே நாட் பி ஆல் அவுட்.

மக்கள் திரும்பி வரச் சொல்லி அழைக்கிறார்கள் என்று இந்திய வீரர்கள் தவறாகப் புரிந்துகொள்வததத் தவிர்க்க தயவு செய்து யாரும் கமான் இண்டியா என்று உற்சாகக் குரல் கொடுக்காதீர்கள்.

2 comments:

said...

எங்க கணிப்பை விட 20 ரன்கள் குறைவாகவே எடுத்துள்ளார்கள்.

வங்க தேச அணியினர் எளிதான இலக்குடன் ஆட இருக்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.

அதுவரை வங்க தேச அணியின் பெர்ஃபார்மன்ஸ் என்னவாக இருக்கும் என்று எங்க ஊரில் கருத்துக் கணிப்பு நடத்தி வெளியிடுகிறோம்!

said...

//அதுவரை வங்க தேச அணியின் பெர்ஃபார்மன்ஸ் என்னவாக இருக்கும் என்று எங்க ஊரில் கருத்துக் கணிப்பு நடத்தி வெளியிடுகிறோம்! //

ஆவியிலக வாசிகளின் கணிப்புப் படி 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெறும் என்று நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன!