Monday, March 19, 2007

மேகம் கருக்குது மழை வரப் பாக்குது!

மேகம் கருக்குது
மழை வரப் பாக்குது
வீசியடிக்குது காத்து!
மழைக் காத்து!

இன்னிக்கு இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் பெர்முடா அணிக்கெதிரா உலகக் கோப்பை போட்டிகளில் ஒரு அதிக பட்ச ஸ்கோர் (413/5) என்ற புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இந்திய அணியினரின் வங்க தேசத்துக்கெதிரான படுதோல்வியால் எழுந்த விமர்சனங்களுக்கும் ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிட்டாயிற்று. (தற்காலிகமாக). சும்மா சொல்லக் கூடாது. சேவாக், கங்குலி, டெண்டுல்கர், யுவராஜ் ஆகியோர் பொறுப்புணர்ந்து ஆடி இருக்கிறார்கள். (அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் என்ற பழமொழி நினைவுக்கு வருதே)

அதெல்லாம் சரி! இந்தியா உருப்படியா நல்லா விளையாடும்போது அப்படியே வானத்தைக் கொஞ்சம் அண்ணாந்து பார்த்தா அடிவயிறு கலக்குது. அப்படியே மேலே இருக்குற பாட்டை உதடு தானாக பாடத் துடிக்குது. இந்தியாவின் வெற்றி இயற்கைக்கே பிடிப்பதில்லை என்பதை ஏற்கனவே பலமுறை பார்த்திருக்கிறோம். நம்ம ஆவி அம்மணி இங்கே கணிச்ச மாதிரி மழை வந்து கெடுத்திடுமோன்னு பயமா இருக்குதுங்க!

மழை தருமோ என் மேகங்கள்..... னு கூட ஒரு பாட்டு இருக்கு. அந்தப் பாட்டை இப்ப ஏனோ ரசிக்க முடியலை!

ஆவி அம்மணியின் கணிப்புகள் சில:

1. இந்திய அணியைப் பொறுத்தவரை அரையிறுதிச் சுற்றுவரை அழைத்துச் செல்லும் வீரர்களாக பொறுப்புடன் விளையாட இருப்பவர்கள்.கங்குலி, சேவாக், ஹர்பஜன் சிங்.

2.சச்சின் ஓரிரு அரை சதம்/சதங்களைப் பூர்த்தி செய்தாலும் எல்லா ஆட்டங்களிலும் அவரது பங்களிப்பு சிறப்பாக இருக்கும் என்பது சந்தேகமே!

3. குறைந்த பட்சம் ஒரு போட்டியாவது குறைந்த பட்சம் 5 முதல் 10 ஓவர்கள் மழையால் பாதிக்கப் படும்

4. இந்திய அணி முக்கியமான விளையாட்டு ஒன்றை டக்ளஸ்வெர்த் முறையின் மூலம் இழக்க நேரிடும். அதுவே அடுத்த சுற்றிற்கு செல்வதில் இருந்து முற்றுப் புள்ளி வைக்கக் கூடும்.

4 வது கணிப்பு இன்னிக்குத் தேறாது. ஆனா ஒரு 25 ஓவர் விளையாடும் வரைக்கும் இயற்கை இன்னிக்கு இந்திய அணிக்கு கருணை காட்டுமா?

பொறுத்திருந்து பார்போம்!

3 comments:

said...

ம்ஹூம். மழை வந்துடுச்சு!

பிட்சை கவர் பண்னியாச்சு!

said...

மழை நின்னாச்சு....
கவர் பண்ணீயதை எடுத்தாச்சு....


அன்புடன்...
சரவணன்.

said...

India should win against the Rain today ..;)