Wednesday, April 18, 2007

ஆணி பிடுங்கப் போனேன்..! ஒரு ஆப்பு வாங்கி வந்தேன்! (1)

வருத்தப் படாத வாலிபர் சங்கத்தின் வாசலில் இருந்து பார்க்கும்பொழுதே ஏக தடபுடலாக இருந்தது. அங்கங்கே ஆட்கள் துரிதமாக பேனர் கட்டுதல், கட் அவுட் வைத்தல், மேடை அமைத்தல், ஜண்டா கட்டுதல் பொன்ற பணிகளில் மும்முரமாக இருந்தனர். தலை கைப்பு அவற்றை மேற்பார்வை பார்த்த வண்ணம் தனது அப்பிரண்டிசுகளிடம் வேலை (ஆப்புவோ அல்வாவோ அல்ல) வாங்கிக் கொண்டிருந்தார்.

"தல தல ஒரு அருமையான ஆஃபர் வந்திருக்கு" என்றவாரே மூச்சிரைக்க ஓடிவருகிறார் சிபி. சப்தம் கேட்டுத் திரும்புகிறார் தலை கைப்பு.

கைப்பு : "தள, ஏன்யா இப்படி ஓடி வரே! நீ தபதபன்னு ஓடி வரதைப் பார்த்தாலே பக்கு பக்குங்குதுய்யா!"

சிபி : "அட! போங்க தலை! எப்பவும் பழசையே சொல்லிகிட்டு, ஒரு அருமையான இளிச்சவாயன் கிடைச்சிருக்கான். நல்ல ஆஃபர் நமக்கு தலை!"

(என்னை விட ஒரு இளிச்ச வாயனா? யாருய்யா அது இந்த ஊருல) என்ற மனதிற்குள் எண்ணியவாறே
சிபியிடம் திரும்ப, அங்கே தேவ் வருகிறார்.

தேவ் : "தல! இப்போ நீங்க என்ன நினைச்சீங்கன்னு சொல்லட்டுமா?"

கைப்பு : "ஆஹா! இதையெல்லாம் கண்டு பிடிச்சி சொல்ல மொத ஆளா வந்துடுங்க! ஆனா எவனெவன் எப்பெப்ப ஆப்பு வைக்கப் போறான்னு மட்டும் கண்டு புடிக்கத் தெரியாது, ஏன்யா! தேவு இந்தக் கொலை வெறி?"

தேவ் : "ஹிஹி..! அதெல்லாம் ஒண்ணுமில்ல தலை! நீங்கதானே சொன்னீங்க, எப்பவும் குறிப்பறிஞ்சி நடந்துக்கணும்னு"

கைப்பு : "ஆமா! இதெல்லாம் நேரங்கெட்ட நேரத்துலதான் குறிப்பறிஞ்சிக்குவீங்க!
அது சரி சிபி! என்னமோ நல்ல ஆஃபர் சொன்னியே! எவன் மாட்டியிருக்கான்?"

சிபி : "அதாவது தலை! வழக்கமா நாம ஆணி பிடுங்கப் போனா எவ்வளவு கிடைக்கும்?"

கைப்பு : "ஸ்டாப்! ஆஃபரைப் பத்தி சொல்லுய்யான்னா நம்ம பிஸினஸைப் பத்தி கேக்குறியே? பாயிண்டுக்கு வாய்யா!"

சிபி : "அட இருங்க தலை! நான் இன்னும் முழுசா சொல்லவே இல்லை. அதுக்குள்ள சொல்ல விடாம குறுக்க பேசிகிட்டு"

கைப்பு : "சரி! இப்ப சொல்லு! நான் ஏதும் குறுக்க பேசுல"

சிபி :"அதாவது வழக்கமா ஒரு ஆணிக்கு எவ்வளவு கிடைக்கும்? மிஞ்சிப் போனா 50 பைசாவோ இல்லாட்டு ஒரு ரூபாவோ கிடைக்குமா? இப்ப நமக்கு கிடைச்சிருக்குற பார்ட்டி ஒரு ஆணிக்கு அஞ்சு ரூவா தரேங்குறான்"

கைப்பு : "என்னது ஒரு ஆணிக்கு அஞ்சு ரூபாயா? அடி சக்கை! யாருய்யா அது அப்படிப்பட்ட பார்ட்டி? ஆளை ஒரே அமுக்கா அமுக்கி இங்கே கூட்டியாரதுதானே"

சிபி : "அதெல்லாம் விட்ருவனா தலை! சங்கத்து வாசல்லியே நிறுத்தி வெச்சிருக்கேன். இப்ப கூப்பிடுறேன் பாரு தலை"
என்று கூறி விட்டு சங்கத்து கேட்டை நோக்கி நகருகிறார்.

கைப்பு : "யோவ் தேவு? இந்த ஆளு ஏதும் காமெடி கீமெடி பண்ணலையே? எதுனா வில்லங்கத்தை விலை கொடுத்து இழுத்து வர்ற ஆளாச்சேய்யா நம்ம சிபி"

தேவ் : "கவலைப் படாதீங்க தலை! நம்ம தள அப்படிப்பட்ட ஆள் இல்லை. எப்பவாச்சும் கொஞ்சம் இடக்கு முடக்கா இருப்பார். அவ்வளவுதான்"

கைப்பு : "எப்பவாச்சுமா? அப்பவெல்லாம் உடம்பு ரணகளமாகுறது எனக்குத்தானய்யா! உனக்கு என்ன? சும்மா சொல்லிட்டுப் போயிடுவே. பார்ப்போம்!"

தேவ் : "அட! அப்படியெல்லாம் ஒன்னியும் ஆகாது தலை! அப்படியே ஆனாலும் நாங்க இருக்கம்ல!"

கைப்பு : "ஆஹா! இதை ஒண்ணை சொல்லி சொல்லியே என்னை ரண களமாக்கிடுறாங்களேய்யா..!"

அப்போது சிபியுடன் ஒரு ஆள் பவ்யமாக கைப்புவை நோக்கி வருகிறான்.

- தொடரும்.

Sunday, April 01, 2007

என்ன நடக்குது தமிழ் மணத்தில்?

என்ன நடக்குது தமிழ் மணத்தில்?

www.thamizmanam.com திறந்தா இப்படி ஒரு பக்கம் வருதே? யாருக்காச்சும் வெவரம் தெரியுமா?



தெரிஞ்சா சொல்லுங்கப்பூ! நாங்கள்ளாம் ஒண்ணும் அறியாத அப்பாவி ஆவிங்க!


Domain Default page

This is default page for thamizmanam.com domain.
Now this page is generated by Plesk for you.
Please upload your own index.html file.


நாங்களும் வியர்டுதான்

எங்களையும் மனுஷங்களா ச்சே ஆவிகளா மதிச்சி வியர்டு பதிவு போட அழைத்த அவந்திகா அக்கா அவர்களுக்கு நன்றி! என்னன்னு தெரியலை! எங்களுக்கு விடுக்கப் பட்ட அழைப்பு எங்களுக்கு மட்டும்தான் தெரியணும்னு நினைச்சாங்களா? இப்போ போய் பார்த்தா அந்த அழைப்பு காணோம்! இருந்தாலும் அப்பவே அட்டென்ஷன் ஆயிட்டம்ல நாங்க!

சரி எங்களோட வியர்டு குணங்களைப் பத்தி ஒவ்வொண்ணாச் சொல்றோம்!

1.திகிலூட்டுதல்

எங்களுக்கு அடுத்தவங்களை திகிலூட்டி கிலியடைய வெச்சி பார்க்குறதுல ஒரு அல்ப சந்தோஷம் இருக்கு. ஒருத்தரை பயமுறுத்தி வேர்க்க வெல வெலக்க அவங்க நிக்கும்போது பார்க்க எவ்வளவு ஜாலியா இருக்கும் தெரியுமா?

நாங்க உயிரோட இருக்கும்போதே டிராகுலா மாதிரி பல் செட் (பிளாஸ்டிக்ல கடைல கிடைக்கும், 1 ரூபா ஒரு செட்) வாங்கி மாட்டிகிட்டு, கருப்புப் போர்வவயை போர்த்திகிட்டு தெருவுல இருக்குற பொடிசுகளையெல்லாம் பயமுறுத்துவோம். அப்புறமா எங்க பேரண்ட்ஸ்கிட்ட கம்ப்ளெயிண்ட் வரும்.
உங்க புள்ளையால எங்க புள்ளைக்கு ஜூரம் வந்துடுச்சுன்னு.

ஒரு நாள் நட்ட நடு ராத்திரி(எங்களுக்கு அப்போ பகல்தான்) நம்ம வலைப்பதிவர் தம்பியை சேட் பண்ண கூப்பிட்டப்போ ஆடிப் போயிட்டார் மனுஷன். பொறுமையா நாங்க உங்களை ஒண்ணும் பண்ண மாட்டோம்ணு சொல்லி புரிய வெச்சதுக்கப்புறம்தான் பேசவே ஆரம்பிச்சார்.

2. கிரிக்கெட்:

எத்தினி தடவை தோத்தாலும் இந்தியா ஜெயிக்கும்ணு உக்காந்து பார்க்குறது எங்களுக்கு தவிர்க்க முடியாத வியர்டா போயிடுச்சு. அட! பழைய மேட்ச் ரீப்ளே போட்டாக்கூட இதுலயாவது அந்த 20 ரன்னை சேர்த்து எடுத்து ஜெயிக்க மாட்டாங்களான்னு ஆவலா பார்த்துகிட்டிருபோம்.

எப்ப இதுல இருந்து மீளப் போறோம்னு தெரியலை!

3. தீனி
நொறுக்குத் தீனின்னா அப்படி இஷ்டம். எப்பவும் வாய்க்கு வேலை கொடுத்துகிட்டே இருப்போம். வயிற்றுக்கே சலிச்சிப் போயி(நொந்து போயி) ஜீரணிக்காம ஸ்டிரைக் பண்ணினாத்தான் கொஞ்சம் வாய்க்கு ஓய்வு கொடுப்போம்.

4. கவுஜ
கவுஜ எழுதுலறதுல (கவுஜ என்ற பேர்ல நாங்க எழுதுறது) கொஞ்சம் ஆர்வம் உண்டு. ஆனா இலக்கணம் இலக்கியமெல்லாம் தெரியாது. வார்த்தைங்களை பிச்சி பிச்சி போட்டு எழுதினா அதுதான் எங்களைப் பொறுத்தவரை கவுஜை!

5. காலணிகள்
எங்களுக்கு விதவிதமா ஷூ, செருப்பு எல்லாம் வாங்கிப் போடணும்னு ஆசைதான். ஆனா என்னங்க பண்ணுறது! ஆவிகளுக்குத்தான் கால் இல்லையெ! அதனால நாங்க ஃப்ரீபெய்டு சிம் கார்டு வாங்கலாம்னு இருக்கோம். அதுலயாவது இன்கம்மிங்க் கால் ஃப்ரீயா கிடைக்குமாமே!


ஆச்சு 5 வியர்டு குணங்கள். எத்தனையோ வியர்டு குனங்கள் இருந்தாலும் பதிவுலகைப் பொறுத்தவரை நாங்க ரொம்ப நல்லவங்கதான். சீரியஸா எழுதி யாரையும் பயமுறுத்தாம முடிஞ்சவரை நகைச்சுவையா எழுதறோம். என்னது? எந்தப் பதிவுல நகைச்சுவைன்னா கேக்குறீங்க. இப்போ ரீசண்டா போட்ட கிரிக்கெட் பதிவுகள் எல்லாம் வேற என்னவாம்?

இப்போ வேற யாரையாவது அழைக்கணுமாம்ல!
சரி நம்ம

இரவுக் கழுகார்,
இம்சை அரசன்,
சுப்பைய்யா வாத்தியார்,
தம்பி

ஆகிய 4 பேரை மட்டும் வியர்டு பதிவுகளை தொடருமாறு கேட்டுக் கொல்கிறோம்.