Sunday, April 01, 2007

நாங்களும் வியர்டுதான்

எங்களையும் மனுஷங்களா ச்சே ஆவிகளா மதிச்சி வியர்டு பதிவு போட அழைத்த அவந்திகா அக்கா அவர்களுக்கு நன்றி! என்னன்னு தெரியலை! எங்களுக்கு விடுக்கப் பட்ட அழைப்பு எங்களுக்கு மட்டும்தான் தெரியணும்னு நினைச்சாங்களா? இப்போ போய் பார்த்தா அந்த அழைப்பு காணோம்! இருந்தாலும் அப்பவே அட்டென்ஷன் ஆயிட்டம்ல நாங்க!

சரி எங்களோட வியர்டு குணங்களைப் பத்தி ஒவ்வொண்ணாச் சொல்றோம்!

1.திகிலூட்டுதல்

எங்களுக்கு அடுத்தவங்களை திகிலூட்டி கிலியடைய வெச்சி பார்க்குறதுல ஒரு அல்ப சந்தோஷம் இருக்கு. ஒருத்தரை பயமுறுத்தி வேர்க்க வெல வெலக்க அவங்க நிக்கும்போது பார்க்க எவ்வளவு ஜாலியா இருக்கும் தெரியுமா?

நாங்க உயிரோட இருக்கும்போதே டிராகுலா மாதிரி பல் செட் (பிளாஸ்டிக்ல கடைல கிடைக்கும், 1 ரூபா ஒரு செட்) வாங்கி மாட்டிகிட்டு, கருப்புப் போர்வவயை போர்த்திகிட்டு தெருவுல இருக்குற பொடிசுகளையெல்லாம் பயமுறுத்துவோம். அப்புறமா எங்க பேரண்ட்ஸ்கிட்ட கம்ப்ளெயிண்ட் வரும்.
உங்க புள்ளையால எங்க புள்ளைக்கு ஜூரம் வந்துடுச்சுன்னு.

ஒரு நாள் நட்ட நடு ராத்திரி(எங்களுக்கு அப்போ பகல்தான்) நம்ம வலைப்பதிவர் தம்பியை சேட் பண்ண கூப்பிட்டப்போ ஆடிப் போயிட்டார் மனுஷன். பொறுமையா நாங்க உங்களை ஒண்ணும் பண்ண மாட்டோம்ணு சொல்லி புரிய வெச்சதுக்கப்புறம்தான் பேசவே ஆரம்பிச்சார்.

2. கிரிக்கெட்:

எத்தினி தடவை தோத்தாலும் இந்தியா ஜெயிக்கும்ணு உக்காந்து பார்க்குறது எங்களுக்கு தவிர்க்க முடியாத வியர்டா போயிடுச்சு. அட! பழைய மேட்ச் ரீப்ளே போட்டாக்கூட இதுலயாவது அந்த 20 ரன்னை சேர்த்து எடுத்து ஜெயிக்க மாட்டாங்களான்னு ஆவலா பார்த்துகிட்டிருபோம்.

எப்ப இதுல இருந்து மீளப் போறோம்னு தெரியலை!

3. தீனி
நொறுக்குத் தீனின்னா அப்படி இஷ்டம். எப்பவும் வாய்க்கு வேலை கொடுத்துகிட்டே இருப்போம். வயிற்றுக்கே சலிச்சிப் போயி(நொந்து போயி) ஜீரணிக்காம ஸ்டிரைக் பண்ணினாத்தான் கொஞ்சம் வாய்க்கு ஓய்வு கொடுப்போம்.

4. கவுஜ
கவுஜ எழுதுலறதுல (கவுஜ என்ற பேர்ல நாங்க எழுதுறது) கொஞ்சம் ஆர்வம் உண்டு. ஆனா இலக்கணம் இலக்கியமெல்லாம் தெரியாது. வார்த்தைங்களை பிச்சி பிச்சி போட்டு எழுதினா அதுதான் எங்களைப் பொறுத்தவரை கவுஜை!

5. காலணிகள்
எங்களுக்கு விதவிதமா ஷூ, செருப்பு எல்லாம் வாங்கிப் போடணும்னு ஆசைதான். ஆனா என்னங்க பண்ணுறது! ஆவிகளுக்குத்தான் கால் இல்லையெ! அதனால நாங்க ஃப்ரீபெய்டு சிம் கார்டு வாங்கலாம்னு இருக்கோம். அதுலயாவது இன்கம்மிங்க் கால் ஃப்ரீயா கிடைக்குமாமே!


ஆச்சு 5 வியர்டு குணங்கள். எத்தனையோ வியர்டு குனங்கள் இருந்தாலும் பதிவுலகைப் பொறுத்தவரை நாங்க ரொம்ப நல்லவங்கதான். சீரியஸா எழுதி யாரையும் பயமுறுத்தாம முடிஞ்சவரை நகைச்சுவையா எழுதறோம். என்னது? எந்தப் பதிவுல நகைச்சுவைன்னா கேக்குறீங்க. இப்போ ரீசண்டா போட்ட கிரிக்கெட் பதிவுகள் எல்லாம் வேற என்னவாம்?

இப்போ வேற யாரையாவது அழைக்கணுமாம்ல!
சரி நம்ம

இரவுக் கழுகார்,
இம்சை அரசன்,
சுப்பைய்யா வாத்தியார்,
தம்பி

ஆகிய 4 பேரை மட்டும் வியர்டு பதிவுகளை தொடருமாறு கேட்டுக் கொல்கிறோம்.

16 comments:

said...

//ஒரு நாள் நட்ட நடு ராத்திரி(எங்களுக்கு அப்போ பகல்தான்) நம்ம வலைப்பதிவர் தம்பியை சேட் பண்ண கூப்பிட்டப்போ ஆடிப் போயிட்டார் மனுஷன். //
தம்பி ஊர்ல நடு ராத்திரி, உங்க ஊர்ல பகலா? இப்படி நடு ராத்திரி முளிச்சிகிட்டு சாட் பண்ணுற தம்பி தான் ஆவியா? ;)

ஆவி, எனக்கு ஒரு சந்தேகம், ஆன்லைன் ஆவிகளாச்சே நீங்க, எந்த ஊர் நடுராத்திரியை follow பண்ணுவீங்க? ;)

said...

அய்யோ...ஆவீஸ்..தேங்ஸ்...யாருமே கமென்ட் போடலைன்னு..பிடிக்கலை போல இருக்குன்னு அந்த போஸ்ட் எடுத்துட்டேன் ஆவீஸ்...நான் கூப்டு வியர்ட் ஆட்டம் ஆடினதுக்கு ரொம்ப தேங்க்ஸ் ஆவீஸ்...
நீங்க பார்த்துட்டு ஒரு கமென்ட் போட்டு இருக்கலாம் இல்ல ஆவீஸ்.. உங்களுக்கும் இஷ்டம் இல்லை போல இருக்குன்னு அந்த போஸ்ட் எதுத்துட்டேன்...பரவாயில்லை...thanks once again aavis...

இந்த கிரிக்கெட் வியர்ட் உங்களூக்கும் இருக்கு..என்னை மாதிரியே...:-))

//அதனால நாங்க ஃப்ரீபெய்டு சிம் கார்டு வாங்கலாம்னு இருக்கோம். அதுலயாவது இன்கம்மிங்க் கால் ஃப்ரீயா கிடைக்குமாமே!//

ஹா ஹ்ஹா ஹா...அய்யோ வயிறு வலிக்குது...

உங்களுக்கு பதில் நான் போட்டுக்கறேனே..என்னையும் எல்லாரும் குட்டிப் பேய்னு தான் கூப்பிடறாங்க..:-))


நன்றி..நன்றி

said...

ஆவீஸ்..உங்களுக்காகதான் நான் அந்த படத்த செலக்ட் பண்ணேன்..நல்லா இருந்துச்சா ஆவீஸ் அந்த படம்...

said...

ஆவி அண்ணாச்சி

கோவையில் கோவியை சந்திக்க வந்ததற்கு மெத்த மகிழ்ச்சி
:)

said...

//அய்யோ...ஆவீஸ்..தேங்ஸ்...யாருமே கமென்ட் போடலைன்னு..பிடிக்கலை போல இருக்குன்னு அந்த போஸ்ட் எடுத்துட்டேன் //

அடப் பாவமே! பிடிக்காமயெல்லாம் இல்லைங்க்! ரொம்பவே சந்தோஷப் பட்டோம்! ஆனா உடனே பதிவோ பின்னூட்டமோ போட முடியலை!

அதான்! பதிவைக் காணோம் என்றவுடன் நீங்க ஏதாவது பயந்துட்டீங்களோன்னு நினைச்சோம்!
:))

அழைப்பு விடுத்தமைக்கு ரொம்ப நன்றி!

படம் ரொம்ப அருமை! அதுதானே எங்க புரொஃபைல் படம். தமிழ் மணத்துல மட்டும்தான் பழைய படமே வருது!

said...

//உங்களுக்கு பதில் நான் போட்டுக்கறேனே..என்னையும் எல்லாரும் குட்டிப் பேய்னு தான் கூப்பிடறாங்க//

தாராளமாப் போட்டுக்குங்க!

இதெல்லாம் கேக்கணும்னா என்ன? எங்க ஊர்க்காரங்கன்னு (குட்டிப் பேய்னு)வேற சொல்றீங்க!

said...

நல்லா கெளப்புறாய்ங்க பீதிய....

said...

//இந்த கிரிக்கெட் வியர்ட் உங்களூக்கும் இருக்கு..என்னை மாதிரியே...:-))//

அட! ஆமாங்க அவந்திகா அக்கா!

என்ன பண்ணுறது! நம்ம பொழப்பு இப்படி ஆகும்னு எங்க கணிப்புல கூட தெரியலையே!

said...

//கோவையில் கோவியை சந்திக்க வந்ததற்கு மெத்த மகிழ்ச்சி//

மிக்க நன்றி கோவி கண்ணன்.

சிபியார்தான் நீங்கள் வரப் போவதாக ஒய்ஜா போர்டு முறையில் எங்களை அழைத்துச் சொன்னார்.

பிறகு அவரது வண்டியிலேயே உக்கடம் வரை அழைத்தும் வந்து உங்களையும் சந்திக்க வைத்தார்.

:) அவருக்கும் எனது நன்றி!

மறுக்காமல் (பயப்படாமல்)எங்களையும் சந்திக்க முன்வந்த தங்களுக்கும் எனது நன்றி.

said...

//ஆவி, எனக்கு ஒரு சந்தேகம், ஆன்லைன் ஆவிகளாச்சே நீங்க, எந்த ஊர் நடுராத்திரியை follow பண்ணுவீங்க//

நாங்கள் இந்திய ஆவிகள்!

இந்தியாவில் பகல் என்றால் எங்களுக்கு இரவு. இந்தியாவில் இரவென்றால் எங்களுக்கு பகல்!

said...

//நல்லா கெளப்புறாய்ங்க பீதிய.... //

பங்காளி!

நாங்களாவது பீதியை மட்டும்தான் கெளப்புறோம்!

சில வியாவாரிகள் கலப்படத்தின் மூலம் பேதியையும் கெளப்புகிறார்கள்!

said...

ஆவி சார்/மேடம்

நான் ஏற்கனவே வியர்ட எழுதி வாங்கி கட்டிகிட்டேன். இன்னொருக்கா ல்லாம் எழூத முடியாது.

ஆவிங்களோட வியர்டு பொதுவா எல்லாருக்கும் தெரியும்.

said...

//ஒரு நாள் நட்ட நடு ராத்திரி(எங்களுக்கு அப்போ பகல்தான்) நம்ம வலைப்பதிவர் தம்பியை சேட் பண்ண கூப்பிட்டப்போ ஆடிப் போயிட்டார் மனுஷன். //

இது வடிகட்டின பொய். நான் யாருக்கும் பயப்படுபவன் அல்லன்.
கல்லறையில் ஒரு நாள் முழுக்க அமர்ந்திருந்தேன் என்பதை வியர்டில் சொல்லியிருக்கிறேன்.

ஆவியையே மொக்கை போட்டு விரட்டியவன் நான் என்பதை இங்கு தெளிவுபடுத்துகிறேன்.

said...

ஆகிய 4 பேரை மட்டும் வியர்டு பதிவுகளை தொடருமாறு கேட்டுக் //கொல்கிறோம்.//

இது தெரிஞ்சே செஞ்ச மிஸ்டேக்கா, இல்ல??????????

said...

//சிபியார்தான் நீங்கள் வரப் போவதாக ஒய்ஜா போர்டு முறையில் எங்களை அழைத்துச் சொன்னார். //

அய்ய்யய்யே கொழப்பமா கீதே!
அப்போ சிபியார்தான் உங்க கொ.ப.செ வா?

said...

//கோவையில் கோவியை சந்திக்க வந்ததற்கு மெத்த மகிழ்ச்சி///

ஆவீஸ் ?..கோவை?...:-0