Wednesday, April 18, 2007

ஆணி பிடுங்கப் போனேன்..! ஒரு ஆப்பு வாங்கி வந்தேன்! (1)

வருத்தப் படாத வாலிபர் சங்கத்தின் வாசலில் இருந்து பார்க்கும்பொழுதே ஏக தடபுடலாக இருந்தது. அங்கங்கே ஆட்கள் துரிதமாக பேனர் கட்டுதல், கட் அவுட் வைத்தல், மேடை அமைத்தல், ஜண்டா கட்டுதல் பொன்ற பணிகளில் மும்முரமாக இருந்தனர். தலை கைப்பு அவற்றை மேற்பார்வை பார்த்த வண்ணம் தனது அப்பிரண்டிசுகளிடம் வேலை (ஆப்புவோ அல்வாவோ அல்ல) வாங்கிக் கொண்டிருந்தார்.

"தல தல ஒரு அருமையான ஆஃபர் வந்திருக்கு" என்றவாரே மூச்சிரைக்க ஓடிவருகிறார் சிபி. சப்தம் கேட்டுத் திரும்புகிறார் தலை கைப்பு.

கைப்பு : "தள, ஏன்யா இப்படி ஓடி வரே! நீ தபதபன்னு ஓடி வரதைப் பார்த்தாலே பக்கு பக்குங்குதுய்யா!"

சிபி : "அட! போங்க தலை! எப்பவும் பழசையே சொல்லிகிட்டு, ஒரு அருமையான இளிச்சவாயன் கிடைச்சிருக்கான். நல்ல ஆஃபர் நமக்கு தலை!"

(என்னை விட ஒரு இளிச்ச வாயனா? யாருய்யா அது இந்த ஊருல) என்ற மனதிற்குள் எண்ணியவாறே
சிபியிடம் திரும்ப, அங்கே தேவ் வருகிறார்.

தேவ் : "தல! இப்போ நீங்க என்ன நினைச்சீங்கன்னு சொல்லட்டுமா?"

கைப்பு : "ஆஹா! இதையெல்லாம் கண்டு பிடிச்சி சொல்ல மொத ஆளா வந்துடுங்க! ஆனா எவனெவன் எப்பெப்ப ஆப்பு வைக்கப் போறான்னு மட்டும் கண்டு புடிக்கத் தெரியாது, ஏன்யா! தேவு இந்தக் கொலை வெறி?"

தேவ் : "ஹிஹி..! அதெல்லாம் ஒண்ணுமில்ல தலை! நீங்கதானே சொன்னீங்க, எப்பவும் குறிப்பறிஞ்சி நடந்துக்கணும்னு"

கைப்பு : "ஆமா! இதெல்லாம் நேரங்கெட்ட நேரத்துலதான் குறிப்பறிஞ்சிக்குவீங்க!
அது சரி சிபி! என்னமோ நல்ல ஆஃபர் சொன்னியே! எவன் மாட்டியிருக்கான்?"

சிபி : "அதாவது தலை! வழக்கமா நாம ஆணி பிடுங்கப் போனா எவ்வளவு கிடைக்கும்?"

கைப்பு : "ஸ்டாப்! ஆஃபரைப் பத்தி சொல்லுய்யான்னா நம்ம பிஸினஸைப் பத்தி கேக்குறியே? பாயிண்டுக்கு வாய்யா!"

சிபி : "அட இருங்க தலை! நான் இன்னும் முழுசா சொல்லவே இல்லை. அதுக்குள்ள சொல்ல விடாம குறுக்க பேசிகிட்டு"

கைப்பு : "சரி! இப்ப சொல்லு! நான் ஏதும் குறுக்க பேசுல"

சிபி :"அதாவது வழக்கமா ஒரு ஆணிக்கு எவ்வளவு கிடைக்கும்? மிஞ்சிப் போனா 50 பைசாவோ இல்லாட்டு ஒரு ரூபாவோ கிடைக்குமா? இப்ப நமக்கு கிடைச்சிருக்குற பார்ட்டி ஒரு ஆணிக்கு அஞ்சு ரூவா தரேங்குறான்"

கைப்பு : "என்னது ஒரு ஆணிக்கு அஞ்சு ரூபாயா? அடி சக்கை! யாருய்யா அது அப்படிப்பட்ட பார்ட்டி? ஆளை ஒரே அமுக்கா அமுக்கி இங்கே கூட்டியாரதுதானே"

சிபி : "அதெல்லாம் விட்ருவனா தலை! சங்கத்து வாசல்லியே நிறுத்தி வெச்சிருக்கேன். இப்ப கூப்பிடுறேன் பாரு தலை"
என்று கூறி விட்டு சங்கத்து கேட்டை நோக்கி நகருகிறார்.

கைப்பு : "யோவ் தேவு? இந்த ஆளு ஏதும் காமெடி கீமெடி பண்ணலையே? எதுனா வில்லங்கத்தை விலை கொடுத்து இழுத்து வர்ற ஆளாச்சேய்யா நம்ம சிபி"

தேவ் : "கவலைப் படாதீங்க தலை! நம்ம தள அப்படிப்பட்ட ஆள் இல்லை. எப்பவாச்சும் கொஞ்சம் இடக்கு முடக்கா இருப்பார். அவ்வளவுதான்"

கைப்பு : "எப்பவாச்சுமா? அப்பவெல்லாம் உடம்பு ரணகளமாகுறது எனக்குத்தானய்யா! உனக்கு என்ன? சும்மா சொல்லிட்டுப் போயிடுவே. பார்ப்போம்!"

தேவ் : "அட! அப்படியெல்லாம் ஒன்னியும் ஆகாது தலை! அப்படியே ஆனாலும் நாங்க இருக்கம்ல!"

கைப்பு : "ஆஹா! இதை ஒண்ணை சொல்லி சொல்லியே என்னை ரண களமாக்கிடுறாங்களேய்யா..!"

அப்போது சிபியுடன் ஒரு ஆள் பவ்யமாக கைப்புவை நோக்கி வருகிறான்.

- தொடரும்.

6 comments:

said...

ஆர்வம் அதிகமாச்சி. ஆன் லைன் ஆவிகள் மனிதர்களைப் பத்தியா?
என்ன நடக்குது இங்கே?

said...

அழகு பத்தின தொடர் விளையாட்டுக்கு உங்களை அழைத்துள்ளேன்.
http://kaattaaru.blogspot.com/2007/04/blog-post_11.html

அழகை அழகா சொல்லுங்கள் பார்க்கலாம்.

இது இரண்டாவது அழைப்பு.

said...

எல்லாரும் நல்லாவே காமெடி பண்றீங்க.. :-)

நீங்கள் வெற்றிபெற என் வாழ்த்துக்கள். :-)

said...

வேய்ட்டீங் ஃபார் நெக்ஸ்ட்டு எபிசோட். :-)

said...

பார்த்து ரொம்ப நாளாச்சு!! எப்படி இருக்கு வாழ்க்கை?

said...

நாங்கள் என்று எண்ணப்படுபவர்கள் லிஸ்ட்ல நான் எப்போ சேந்தேன்.. அடப்பா(ஆ)வி... சொல்லவே இல்லையே இதெல்லாம்...