இந்த ஹைக்கூ எழுதுறதைப் பத்தி அண்ணன் பாலபாரதி சொல்லிக் கொடுத்தாரேன்னு நாங்களும் கொஞ்சம் முயற்சி பண்ணினோம்!
பல்லக்குப் பயணம்!
ஆசை நிறைவேறியது!
பாடையில் நான்!
காத்திருக்கத் தேவையில்லை
முன்பதிவுக்கு
இறுதிப் பயணம்!
அந்தஸ்து காரணமாய்
நெருங்காமலிருந்தவர்கள்
அருகருகே சமாதிகளில்!
(இப்ப சொல்லுங்க நாங்களும் பா.க.ச வில் இருக்கிறோம்தானே)
இவண்,
ஆன்லைன் ஆவிகள்,
ஆவியுலக தலைமை கிளை.
பதிவு எண் : 131313/8
Friday, February 16, 2007
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
அனைத்து ஹைகூக்களும் அருமை.
கொஞ்சம் பயமாகவும் இருந்தது..
ஏன் சாவைப்பத்தியே எழுதறீங்க.. ஆவியா இருந்தாலும் ரத்தமும், சதையுமா வாழ்ந்தவங்க தானே.. நீங்க..
கொஞ்சம் வாழ்க்கையை பத்தியும் சொல்லுங்களேன்.
சரி..
அது என்ன பா.க.ச.?
//காத்திருக்கத் தேவையில்லை
முன்பதிவுக்கு
இறுதிப் பயணம்!//
அங்கயும் முன்பதிவு வந்துடுச்சிங்க அம்மணி! :))
//அனைத்து ஹைகூக்களும் அருமை//
மிக்க நன்றி கவிப்ரியன்!
//கொஞ்சம் பயமாகவும் இருந்தது//
ஹிஹி..
//ஏன் சாவைப்பத்தியே எழுதறீங்க.. ஆவியா இருந்தாலும் ரத்தமும், சதையுமா வாழ்ந்தவங்க தானே.. நீங்க..
கொஞ்சம் வாழ்க்கையை பத்தியும் சொல்லுங்களேன்.
//
வாழ்க்கையில என்னங்க இருக்குது! வாழ்க்கையை முடித்த பின்புதானே எல்லாம் தெரியுது!
//அது என்ன பா.க.ச.? //
பாலபாரதியை கலாய்ப்போர் சங்கம்!
:))
//அங்கயும் முன்பதிவு வந்துடுச்சிங்க அம்மணி! :))
//
தம்பி!
இங்கயும் முன்பதிவா?
அடப்பாவிகளா! (அட (ப்+ப்) + ஆவிகளா!)
//
அந்தஸ்து காரணமாய்
நெருங்காமலிருந்தவர்கள்
அருகருகே சமாதிகளில்!//
ஆ.அண்ணாச்சி கவுஜ நல்லா இருக்கு.....
ம்ம்ம் இந்த பாலாஸ் திருந்தமாட்டாரே...மனிசங்கள தான் கவிதை எழுதுறேன்ன மிரட்டினாருன்னா..ஆவிங்களையுமா??
//ஆ.அண்ணாச்சி கவுஜ நல்லா இருக்கு.....
//
மிக்க நன்றி இராம் அண்ணா!
//ம்ம்ம் இந்த பாலாஸ் திருந்தமாட்டாரே...மனிசங்கள தான் கவிதை எழுதுறேன்ன மிரட்டினாருன்னா..ஆவிங்களையுமா??
//
அட ஆமாங்க தூயா! என்னங்க பண்ணுறது?
(ஆமா! நீங்களும் பா.க.ச உறுப்பினரா?)
All the hiqoos (spelling?) are awesome!! Just so apt! Send it to Sujatha to be included in his Katradhum, Petradhum.
Post a Comment