
உறவுகளில் நாட்டம்!
இழந்தது உடலைத்தான்!
உணர்வுகளை அல்ல!
ஆசைகள் அழியாமல்தான்
ஆவிகளாய் அலைகிறோம்!
நிராசைகள் எங்களை
நிர்க்கதி ஆக்கிவிட முடியாது!
மீண்டும் மீண்டும்வருவோம்!
மண்ணுலக ஆசைகள்
எங்களிடம்நிரந்தரமாய்
இருக்கும் வரை!
ஆம்! ஆசைகளும்
இறக்கும் வரை!
அமானுஷ்யங்கள் நிறைந்தது. இறந்த பின் ஆத்மாவின் நிலை என்ன? முடிவில்லாக் கேள்வி.
7 comments:
ம்ஹூம். நாங்க எழுதின கவிதை யாருக்குமே பிடிக்கலியா?
ஆவி அண்ணா,
கவிதை நல்லாயிருக்கு! எப்போ கவியரங்கம் நடத்தப்போறீங்க? :)
அப்பறம் சொல்ல பறந்துட்டேன்...
கவிதை நல்லாயிருக்கு ;)
திரு அண்ணா,
//எப்போ கவியரங்கம் நடத்தப்போறீங்க?//
உங்களை மாதிரி ரசிகர்கள் இருக்கும்போது என்ன கவலை! சீக்கிரமே நடத்திடலாம்.
//கவிதை நல்லாயிருக்கு!//
ரொம்ப நன்றி திரு அண்ணா!
//அப்பறம் சொல்ல பறந்துட்டேன்...
கவிதை நல்லாயிருக்கு//
ஹை! வெட்டி அண்ணாச்சி வாங்க!
முதல் வருகைக்கு ரொம்ப நன்றி!
ஆவியின் கவிதை
ஆவலுடன் வாசித்தேன்
நிரந்திரமான நிராசைகள்
நிரைவேறுமென நம்புகிறேன்!
Post a Comment