எங்கள் ஊரைச் சேர்ந்த அம்மணியின் ஆர்வக்கோளாறின் காரணமாக பிளாக்கர் பீட்டாவிற்கு அப்டேட் செய்யப்போய் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்ட கதையாயிற்று. எங்களுடைய பழைய வலைப்பூவான
ஆவிகள் உலகத்தில் போட்ட புதிய பதிவுகளை தமிழ் மணத்தில் இணைக்கும்போது பிழைச் செய்திகள் வந்தபடியால் மீண்டும் பழையபடி பிளாக்கரிலேயே வேறு வலைப்பூ தொடங்கி விட்டோம்.
இம்முறை பொறுப்பு என் கையில் வழங்கப்பட்டுள்ளது. இனி ஆவி அம்மணி இல்லை. ஆவி அண்ணாச்சி என்று அறியுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொல்கிறேன்.
இன்னும் ஒரு வாரத்திற்குள் பழைய வலைப்பூ அழிக்கப்பட்டுவிடும்.
நான் அமானுஷ்ய ஆவியின் போலி அல்ல என்று நிரூபிக்க இதன்மூலம் துண்டைப் போட்டு தாண்டுகிறேன்.
(ஐடியா உபயம்: ஒரு அனானி அண்ணாச்சி)